Saturday 8 October 2011

என் பாட்டியும் எனக்கு தாய் தான்


மம்மி இப்புடி தான் நாங்கள் எங்கள் பாட்டியை அழைப்போம். சிறிது நாட்களாக அவள் உடல் நிலை சரி இல்லாமல் மருத்துவமனை படுக்கையில் இருகின்றாள். ஹிட்லர் மாதிரி குடும்பத்தை ஆட்சி செய்தவள் இன்று குருவி கூடு போல் ஒடுங்கி படுகையில் கிடைக்குறாள். அவளை அப்புடி பார்த்ததும் என் நினைவுகள் பின்னோக்கி செல்கின்றது.
 
நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் பொழுது மதிய உணவு வேளையில் மற்ற பிள்ளைகளின் அம்மாக்கள் வந்து பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுவார்கள் , எனக்கோ என் பெற்றோர் அரசாங்க பணியில் இருந்ததால் ஒரு நாளும் அம்மா எனக்கு சோறு கொண்டு வந்து கொடுத்தது கிடையாது, எனக்கு மட்டும் பள்ளியின் ஆயா அல்லது வகுப்பு ஆசிரியை ஊட்டி விடுவார்கள் , என்றாவுது ஒரு நாள் இந்த நேரத்தில் நம்ம அம்மா வந்த எவ்வளவு நல்ல இருக்கும் என்று நினைத்த நொடியில்,நான் எதிர்பார்க்காத நேரத்தில் எனக்கு பிடித்த உணவு பொட்டலங்களுடன் வந்து நிற்பாய் , அப்பொழுது நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது உன்னை பார்த்த உடன் "மம்மி" என்று கத்தி கொண்டே ஓடி வந்து கட்டி கொள்வேன். என்னை காரில் உட்கார வைத்து எனக்கு கதைகளை பேசி கொண்டே உணவை ஊட்டி விடுவாய்.இப்புடி எத்தனையோ நாட்கள் அம்மாவை நினைக்கும் பொழுது அம்மாவிற்கு பதில் நீ வந்து சந்தோஷ படுத்தி இருக்கின்றாய்.

நான் எதற்காகவாவுது அடம்பிடித்து அழுதால் அம்மா என்னை அடிப்பாள், நான் உடனே மம்மி க்கு போன் செய்து "இந்த ஜெயகுமாரி என்னை அடிக்கின்றாள் என்று தேம்பி தேம்பி அழுது கொண்டே  சொல்லுவேன் உடனே மம்மி "அழுவதே டி ராஜாதி நீ கவலை படாதே நாளைக்கு அம்மா இங்க வருவா இல்ல அப்போ கொம்பாலையே பிள்ளையை அடிபியானு சொல்லி அடிக்கிறேன் " என்று சொல்லுவாள் அதை கேட்ட உடன் அழுகை நின்று விட்டு முகத்தில் ஒரு சந்தோஷம் வந்துவிடும் உடனே அம்மா பக்கம் திரும்பி "இரு இரு என்னை அடிச்சில நாளைக்கு மம்மி விட்டுக்கு போவில்ல அங்க மம்மி உன்ன அடிக்க கம்போட வெயிட் பண்றா " ன்னு சொல்லிவிட்டு ஏதோ சாதித்தது போல் நடந்து செல்வேன், மறுநாள் பார்த்தால் எந்த பொருளுக்காக நான் அடம் பிடிதேனோ அந்த பொருளுடன் விட்டில் வந்து நிற்பாய். இப்புடி பட்ட ஆச்சிரியங்களை(surprises ) நீ உட்காரும் முன்பு வரை செய்தாயே (சுமார் 8 வருடங்கள் முன்பு வரை ). இப்புடி நான் வளர வளர பொம்மைகள், துணி மணிகள் , நகைகள் என்று என்னுடைய வளர்ச்சிக்கு ஏற்றார் போல் குடுத்து சந்தோஷ படுத்தினாய்.


ஒரு முறை அக்கா throw ball வாங்கி தர சொல்லி கேட்டாள், அவள் அப்பொழுது ஒன்பதாவுது படித்து கொண்டு இருந்தால் என்று நினைக்குறேன் , உங்களுக்கோ அப்பொழுது தான் முட்டி வலி வர ஆரம்பித்த நேரம் . அவள் கேட்டாள் என்பதற்காக அன்று மாலையே அண்ணா நகரில் இருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் வரையில் உள்ள எல்லா விளையாட்டு விற்பனை கடைகளிலும் இறங்கி இறங்கி ஏறி கடைசியில் சென்ட்ரல் ஸ்டேஷன் வசிளில் உள்ள சப் வேயில் இருக்கின்ற விளையாட்டு கடையில் கிடைத்தது. அந்த பந்தை வாங்கி வந்து காரில் அமர்ந்த பிறகு தான் உண் கால் கெஞ்சுவதை உணர்ந்தாய்.அந்த பந்து வந்த பிறகு தினமும் மாடியில் நாம் விளையாடுவோம்.எதுவுமே நாங்கள் கேட்டு நீ இல்லை என்றோ முடியாது என்றோ மறுத்தது கிடையாது . இரண்டு நாளில் கேட்ட பொருள் வந்துவிடும்.

விடுமுறையில் உண் விட்டிற்கு வருவது என்றால் அவ்வுளவு ஆசை உடன் வருவோம். எங்களுக்கு பிடித்தமான வித விதமான உணவு வகைகளை சமைத்து கொடுப்பாய், அதுவும் சடுதியில் (just 20 mts ) சமைத்து விடுவாய். சமையலில் உன் கை பக்குவமே தனி தான், நீ சமைக்கும் பொழுது உன் கூடவே நின்று கதை அளந்து கொண்டு நீ எப்புடி சமைக்கின்றாய்  என்று பார்த்து இன்று நான் சமைத்தால் விட்டில் உள்ளோர்கள் சாப்பிட்டு விட்டு "நீ மம்மி மாதிரியே சமைக்குற" என்று சொல்லும் பொழுது உள்ளுக்குள் பெருமையாக இருக்கும். தினமும் மாலை வந்தால் மெரினா பீச் சென்று விளையாடுவோம், பிறகு திருவல்லிக்கேணி மார்கெட் சென்று அடுத்தநாள் சமைக்க தேவையான பொருள்களை வாங்கி கொண்டு வரும் வழியில் டிரைவ்-இன்-வூட்லண்ட்சில் சாப்பிட்டு விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்புவோம், வரும் வழியில் காரில் எத்தனை கதைகள் ,கிண்டல்கள் அடித்து கொண்டு வருவோம் .சில நாட்களில் தாத்தா விட்டில் இருந்தால் அன்று வெளியில் சாப்பிடாமல் விட்டிற்கு வந்த உடன் முதலில் எனக்கு பால் சாதம் பிசைந்து ஊட்டி விட்டு தான் தாத்தா விற்கே சாப்பாடு பரிமாருவாய்.

பகல் வேளைகளில் நீ சவுகாசமாக உட்கார்ந்து என்னையும் உன் மடியில் படுக்க வைத்து கொண்டு நீ புஸ்தகங்களை படித்து காட்டுவாய்  நானும் கேட்டுகொண்டே தூங்கி விடுவேன்.இரவில் தூக்கம் வரவில்லை என்றால் எங்களுக்கு பேய் கதைகளை உன் கண்ணையும் வாயையும் உருட்டி கோணி கொண்டு சொல்லும் பொழுது நாங்கள் அலறி விடுவோம்.என்னை தூங்க வைப்பதற்காக நீ பாடிய பழைய தாலாட்டு பாடல்கள் அதிலும் நீ பாடும் "அன்பில் மலர்ந்த நல் ரோஜா " இன்று குடும்ப பாட்டாகவே மாறிவிட்டது .புகழுக்கும் மகிழுக்கும் (என் அக்காவின் மகன்கள் ) அது தான் இன்று அவர்களுக்கு தாலாட்டு பாட்டு. மம்மி நீ அடிக்கடி பாடும் "மாலை பொழுதின் மயக்கத்திலே "
என்ற பாடல் சிறிது நாட்காளாக என் காதில் விழவில்லை . சீக்கிரம் எழுந்து வந்து பாடு மம்மி ஆசையாக இருகின்றது உன் குரலில் கேட்க.

மம்மி இது வரை நீ எங்களை அடித்ததும் இல்லை கண்டித்தும் இல்லை , நாங்கள் எதாவுது திருட்டு தனம் செய்தால் நீ "ஆய்" என்று கடுமையான குரலில் சொல்லுவாய் அவ்வளவு தான் அந்த குரலுக்கே ஒடுங்கி போய் விடுவார்கள் நான் மட்டும் கொஞ்சம் தைரியத்தை வர வழைத்து கொண்டு "போடி" என்று சொல்லி விட்டு ஓடிவிடுவேன் , பல நேரங்களில் நீயே இதை மற்றவர்கள் இடத்தில சொல்லி இருக்கின்றாய் "அவ கோவம் வந்த என்னையே போடின்னிட்டு போய் கிட்டே இருப்பா " என்று  . அவ்வளவு ஏன் நீ இதுவரை உன் மகளை (என் அம்மா ) கூட அடித்ததில்லை என்று அம்மாவே சொல்லி இருக்கிறாள்.எவ்வுளவு கோவத்திலும் நீ கை ஓங்கியது கிடையாது.உன் தாய்மை உணர்வால் நீ கட்டிபோட்டு விட்டாய் எங்கள் அனைவறையும்.எனக்கு ஆச்சிரியமான விஷயம் என்ன வென்றால் இவ்வுளவு சூழ்நிலைக்கு நடுவுலேயும் உன் மருத்துவ பணியையும் செய்து கொண்டு இருந்தாய்.

ஒரு கவிஞனின்  வரிகள் ஞ்யபகதுக்கு வருகின்றது "மழலையில் நான் சாய்ந்த படி முதமையிலும்  வேண்டும் அடி " எவ்வுளவு உணர்வு பூர்வமான வரிகள் , உண்மையில் நான் என் மம்மி (பாட்டி) இடம் வேண்டுவதும் அதுதான்.

அனைத்தும் பசுமையான நினைவுகளாய் இருக்கின்றது.அந்த நாட்கள் திரும்ப கிடைக்குமா  மம்மி? ,ப்ளீஸ் சீக்கிரம் நலமாகி  திரும்பி வா மம்மி


18 comments:

  1. நூறாண்டு காலம் வாழ்க!
    நோய் நொடிவில்லாமல் உங்கள் மம்மி !!
    Sam Vijay

    ReplyDelete
  2. பாட்டி உடல் நலம் பெற்று வீடு திரும்ப என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  3. உங்க பாட்டியை பற்றி படித்தது எனது ஆச்சியை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது..

    அவர்கள் உடல் நலம் பெற்று.. ஆரோக்யமாய் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

    பகிர்வுக்கு நன்றி.. மச்சி!

    ReplyDelete
  4. நினைவி கூர்தல் என்பது நெஞ்சத்துக் காற்றின் நேசத்துக் கீற்று. அன்னைதான் உலகின் எல்லை. அன்பின் எல்லை. அன்புக்கே அன்பு செலுத்திய அன்னைக்கும் அன்னை அன்றோ பாட்டி. அவர்கள் சடுதியில் நலம் பெறவும் தங்களது இந்த பதிவைபடித்து கண்ணீருடன் உங்களை கட்டி பிடித்து கொள்ளவும் தங்கள் குழந்தைகளுக்கு தங்களின் லூட்டி பற்றி கதை சொல்லவும் எனது பிரார்த்தனைகள். இந்த நேச காற்று வாழையடி வாழையாய் எல்லா இல்லங்களிலும் வீசட்டும்.

    ReplyDelete
  5. நன்றி விஜய்

    ReplyDelete
  6. நன்றி முத்து அண்ணா

    ReplyDelete
  7. நன்றி மச்சி

    ReplyDelete
  8. நிச்சியமாக சங்கர் சார் , இன்றைய தலை முறையினர் பெரியோர்களின் மகிமை தெரியாமல் வளர்கிறார்கள். சொல்லி புரிய வைக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருகின்றோம்

    ReplyDelete
  9. ninaivugal sugamaanavai..yennaiyum pinnoki poga vaithu vittathu unthan varigal...seekiram nalmodu varuvaanga unga mummy(paatti)....

    ReplyDelete
  10. It brought some old memories kayal... romba azhagu Mummy. You are blessed to have her. I also want to be a mummy like that... missed by everyone.

    ReplyDelete
  11. பாட்டி உடல் குணமடைந்து மீண்டும் ஆட்சிபுரிய பிரார்த்தனைகள்!

    ReplyDelete
  12. Mythili akka neengalum adhey maadhiri oru mummyaa irupeenga :)

    ReplyDelete
  13. தமாசு என்ற பெயரால் ஈர்க்கப்பட்டு இந்த வலைதளம் வந்தேன். இவ்வளவு ஸீரியஸான பதிவை எதிர்பார்க்கவில்லை. தன்னம்பிக்கை நிரம்பியவர் நீங்கள். பாட்டிக்கு மன்னிக்கவும் மம்மிக்கு தன்னம்பிக்கை ஊட்டுங்கள். அவர் முழுநலம் அடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Martin sir ungal padhivai paarka villai ithanai maadhangalaaga mannikavum, avar indru varaiyil maruthuvamanaiyil thaan irukindraar..naandri sir

      Delete
  14. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. i totaly forgot iniyavan, vera edhavudhu potti irundha sollunga kandippa kalandhukuren, sorry unga comment ippo thaan paarthen :)

      Delete