Saturday, 8 October 2011

என் பாட்டியும் எனக்கு தாய் தான்


மம்மி இப்புடி தான் நாங்கள் எங்கள் பாட்டியை அழைப்போம். சிறிது நாட்களாக அவள் உடல் நிலை சரி இல்லாமல் மருத்துவமனை படுக்கையில் இருகின்றாள். ஹிட்லர் மாதிரி குடும்பத்தை ஆட்சி செய்தவள் இன்று குருவி கூடு போல் ஒடுங்கி படுகையில் கிடைக்குறாள். அவளை அப்புடி பார்த்ததும் என் நினைவுகள் பின்னோக்கி செல்கின்றது.
 
நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் பொழுது மதிய உணவு வேளையில் மற்ற பிள்ளைகளின் அம்மாக்கள் வந்து பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுவார்கள் , எனக்கோ என் பெற்றோர் அரசாங்க பணியில் இருந்ததால் ஒரு நாளும் அம்மா எனக்கு சோறு கொண்டு வந்து கொடுத்தது கிடையாது, எனக்கு மட்டும் பள்ளியின் ஆயா அல்லது வகுப்பு ஆசிரியை ஊட்டி விடுவார்கள் , என்றாவுது ஒரு நாள் இந்த நேரத்தில் நம்ம அம்மா வந்த எவ்வளவு நல்ல இருக்கும் என்று நினைத்த நொடியில்,நான் எதிர்பார்க்காத நேரத்தில் எனக்கு பிடித்த உணவு பொட்டலங்களுடன் வந்து நிற்பாய் , அப்பொழுது நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது உன்னை பார்த்த உடன் "மம்மி" என்று கத்தி கொண்டே ஓடி வந்து கட்டி கொள்வேன். என்னை காரில் உட்கார வைத்து எனக்கு கதைகளை பேசி கொண்டே உணவை ஊட்டி விடுவாய்.இப்புடி எத்தனையோ நாட்கள் அம்மாவை நினைக்கும் பொழுது அம்மாவிற்கு பதில் நீ வந்து சந்தோஷ படுத்தி இருக்கின்றாய்.

நான் எதற்காகவாவுது அடம்பிடித்து அழுதால் அம்மா என்னை அடிப்பாள், நான் உடனே மம்மி க்கு போன் செய்து "இந்த ஜெயகுமாரி என்னை அடிக்கின்றாள் என்று தேம்பி தேம்பி அழுது கொண்டே  சொல்லுவேன் உடனே மம்மி "அழுவதே டி ராஜாதி நீ கவலை படாதே நாளைக்கு அம்மா இங்க வருவா இல்ல அப்போ கொம்பாலையே பிள்ளையை அடிபியானு சொல்லி அடிக்கிறேன் " என்று சொல்லுவாள் அதை கேட்ட உடன் அழுகை நின்று விட்டு முகத்தில் ஒரு சந்தோஷம் வந்துவிடும் உடனே அம்மா பக்கம் திரும்பி "இரு இரு என்னை அடிச்சில நாளைக்கு மம்மி விட்டுக்கு போவில்ல அங்க மம்மி உன்ன அடிக்க கம்போட வெயிட் பண்றா " ன்னு சொல்லிவிட்டு ஏதோ சாதித்தது போல் நடந்து செல்வேன், மறுநாள் பார்த்தால் எந்த பொருளுக்காக நான் அடம் பிடிதேனோ அந்த பொருளுடன் விட்டில் வந்து நிற்பாய். இப்புடி பட்ட ஆச்சிரியங்களை(surprises ) நீ உட்காரும் முன்பு வரை செய்தாயே (சுமார் 8 வருடங்கள் முன்பு வரை ). இப்புடி நான் வளர வளர பொம்மைகள், துணி மணிகள் , நகைகள் என்று என்னுடைய வளர்ச்சிக்கு ஏற்றார் போல் குடுத்து சந்தோஷ படுத்தினாய்.


ஒரு முறை அக்கா throw ball வாங்கி தர சொல்லி கேட்டாள், அவள் அப்பொழுது ஒன்பதாவுது படித்து கொண்டு இருந்தால் என்று நினைக்குறேன் , உங்களுக்கோ அப்பொழுது தான் முட்டி வலி வர ஆரம்பித்த நேரம் . அவள் கேட்டாள் என்பதற்காக அன்று மாலையே அண்ணா நகரில் இருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் வரையில் உள்ள எல்லா விளையாட்டு விற்பனை கடைகளிலும் இறங்கி இறங்கி ஏறி கடைசியில் சென்ட்ரல் ஸ்டேஷன் வசிளில் உள்ள சப் வேயில் இருக்கின்ற விளையாட்டு கடையில் கிடைத்தது. அந்த பந்தை வாங்கி வந்து காரில் அமர்ந்த பிறகு தான் உண் கால் கெஞ்சுவதை உணர்ந்தாய்.அந்த பந்து வந்த பிறகு தினமும் மாடியில் நாம் விளையாடுவோம்.எதுவுமே நாங்கள் கேட்டு நீ இல்லை என்றோ முடியாது என்றோ மறுத்தது கிடையாது . இரண்டு நாளில் கேட்ட பொருள் வந்துவிடும்.

விடுமுறையில் உண் விட்டிற்கு வருவது என்றால் அவ்வுளவு ஆசை உடன் வருவோம். எங்களுக்கு பிடித்தமான வித விதமான உணவு வகைகளை சமைத்து கொடுப்பாய், அதுவும் சடுதியில் (just 20 mts ) சமைத்து விடுவாய். சமையலில் உன் கை பக்குவமே தனி தான், நீ சமைக்கும் பொழுது உன் கூடவே நின்று கதை அளந்து கொண்டு நீ எப்புடி சமைக்கின்றாய்  என்று பார்த்து இன்று நான் சமைத்தால் விட்டில் உள்ளோர்கள் சாப்பிட்டு விட்டு "நீ மம்மி மாதிரியே சமைக்குற" என்று சொல்லும் பொழுது உள்ளுக்குள் பெருமையாக இருக்கும். தினமும் மாலை வந்தால் மெரினா பீச் சென்று விளையாடுவோம், பிறகு திருவல்லிக்கேணி மார்கெட் சென்று அடுத்தநாள் சமைக்க தேவையான பொருள்களை வாங்கி கொண்டு வரும் வழியில் டிரைவ்-இன்-வூட்லண்ட்சில் சாப்பிட்டு விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்புவோம், வரும் வழியில் காரில் எத்தனை கதைகள் ,கிண்டல்கள் அடித்து கொண்டு வருவோம் .சில நாட்களில் தாத்தா விட்டில் இருந்தால் அன்று வெளியில் சாப்பிடாமல் விட்டிற்கு வந்த உடன் முதலில் எனக்கு பால் சாதம் பிசைந்து ஊட்டி விட்டு தான் தாத்தா விற்கே சாப்பாடு பரிமாருவாய்.

பகல் வேளைகளில் நீ சவுகாசமாக உட்கார்ந்து என்னையும் உன் மடியில் படுக்க வைத்து கொண்டு நீ புஸ்தகங்களை படித்து காட்டுவாய்  நானும் கேட்டுகொண்டே தூங்கி விடுவேன்.இரவில் தூக்கம் வரவில்லை என்றால் எங்களுக்கு பேய் கதைகளை உன் கண்ணையும் வாயையும் உருட்டி கோணி கொண்டு சொல்லும் பொழுது நாங்கள் அலறி விடுவோம்.என்னை தூங்க வைப்பதற்காக நீ பாடிய பழைய தாலாட்டு பாடல்கள் அதிலும் நீ பாடும் "அன்பில் மலர்ந்த நல் ரோஜா " இன்று குடும்ப பாட்டாகவே மாறிவிட்டது .புகழுக்கும் மகிழுக்கும் (என் அக்காவின் மகன்கள் ) அது தான் இன்று அவர்களுக்கு தாலாட்டு பாட்டு. மம்மி நீ அடிக்கடி பாடும் "மாலை பொழுதின் மயக்கத்திலே "
என்ற பாடல் சிறிது நாட்காளாக என் காதில் விழவில்லை . சீக்கிரம் எழுந்து வந்து பாடு மம்மி ஆசையாக இருகின்றது உன் குரலில் கேட்க.

மம்மி இது வரை நீ எங்களை அடித்ததும் இல்லை கண்டித்தும் இல்லை , நாங்கள் எதாவுது திருட்டு தனம் செய்தால் நீ "ஆய்" என்று கடுமையான குரலில் சொல்லுவாய் அவ்வளவு தான் அந்த குரலுக்கே ஒடுங்கி போய் விடுவார்கள் நான் மட்டும் கொஞ்சம் தைரியத்தை வர வழைத்து கொண்டு "போடி" என்று சொல்லி விட்டு ஓடிவிடுவேன் , பல நேரங்களில் நீயே இதை மற்றவர்கள் இடத்தில சொல்லி இருக்கின்றாய் "அவ கோவம் வந்த என்னையே போடின்னிட்டு போய் கிட்டே இருப்பா " என்று  . அவ்வளவு ஏன் நீ இதுவரை உன் மகளை (என் அம்மா ) கூட அடித்ததில்லை என்று அம்மாவே சொல்லி இருக்கிறாள்.எவ்வுளவு கோவத்திலும் நீ கை ஓங்கியது கிடையாது.உன் தாய்மை உணர்வால் நீ கட்டிபோட்டு விட்டாய் எங்கள் அனைவறையும்.எனக்கு ஆச்சிரியமான விஷயம் என்ன வென்றால் இவ்வுளவு சூழ்நிலைக்கு நடுவுலேயும் உன் மருத்துவ பணியையும் செய்து கொண்டு இருந்தாய்.

ஒரு கவிஞனின்  வரிகள் ஞ்யபகதுக்கு வருகின்றது "மழலையில் நான் சாய்ந்த படி முதமையிலும்  வேண்டும் அடி " எவ்வுளவு உணர்வு பூர்வமான வரிகள் , உண்மையில் நான் என் மம்மி (பாட்டி) இடம் வேண்டுவதும் அதுதான்.

அனைத்தும் பசுமையான நினைவுகளாய் இருக்கின்றது.அந்த நாட்கள் திரும்ப கிடைக்குமா  மம்மி? ,ப்ளீஸ் சீக்கிரம் நலமாகி  திரும்பி வா மம்மி


Friday, 16 September 2011

முக புத்தகத்தில் எனக்கு கிடைத்த அண்ணன்கள்

என்னடா எழுதுவது என்று எண்ணி கொண்டு இருக்கையில் சரி நமக்கு முக புத்தகத்தில் கிடைத்த அண்ணன்கள் பற்றி எழுதாலாம் என்று எண்ணம் வந்தது..சரி எந்த வரிசையில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசித்த பொழுது சரி முதலில் நாம் யாரை அண்ணன் என்று அழைத்தோமோ அந்த வரிசை  படியே எழுதலாம் என்று முடிவு செய்து தொடங்கி விட்டேன் :)

அண்ணன்கள் :
செல்வா அண்ணா
அவர் ஒரு அண்ணா என்பதிற்கு பதில் காட் பாதர் என்று சொல்லலாம் , எதை பற்றி வேண்டும் என்றாலும் அவரிடம் மனம் விட்டு பேசலாம் எப்பொழுது வேண்டும் என்றாலும் பேசலாம். அவரிடம் சொல்லும் விஷயம் மற்றவர் காதுக்கு எப்பொழுதும் செல்லாது, தகுந்த அறிவுரை கூறுவார்.இன்று வரை அவர் சொன்ன யோசனைகள் எனக்கு தப்பாக சென்றது இல்லை. எனக்கு மனம் சரி இல்லை என்றால் நான் இரவு 1 மணிக்கு கால் செய்தாலும் எடுத்து பேசுவார் நான் தொலை பேசியை  வைக்கும் பொழுது சிரித்து கொண்டு வைப்பேன் அந்த அளவுக்கு என் மனதை சந்தோஷ படுத்து பவர்.பலரின் வேதனைகளை காது கொடுத்து கேட்பவர் .அவர் எனக்கு மட்டும் அல்ல இந்த முக புத்தகதிற்கே அண்ணன்.

சேரன் அண்ணா  :

எளிமையாக பழக கூடியவர். யார் என்னை பற்றி அவரிடம் தவறாக பேசினாலும் "லட்டு என்ன விஷயம் என் எப்புடி நடந்தது? முதலில் உன்னிடம் கேட்டு விட்டு தான் அந்த நபருடன் பேசலாம் என்று இருக்கின்றேன் " என்று முதலில் உண்மையை தெரிந்து கொண்டு பேச நினைப்பவர். எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை ஆனால் அந்த காவலையை போக்கியவர். எனக்கு முதுகு எலும்பு பிரச்சனை வந்த பொழுது வலி தெரியாமல் இருக்க பல உடற் பயற்சிகள் சொல்லி குடுத்து அக்கறை உடன் பார்த்து கொள்பவர் . உரிமையோடு சண்டை பிடிப்பேன் அதே போல் ஆசை தீர "ஐ லவ் யு அண்ணா" என்று சொல்லுபவலும் நான் தான் அவரும் அதே போல் பாசத்துடன் "ஐ டூ லவ் யு டா லட்டு " என்று சொல்லும் அழகே தனி.:)

மதுரை சுந்தர் அண்ணா :


எனக்கு அண்ணன் இல்லை என்றால் இவருக்கு சகோதிரிகளே இல்லை. நான் மதுரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் பெற்றோருடன் சென்ற பொழுது பல வசதிகளை கேட்காமலே செய்து கொடுத்தவர் . நான் என்றால் கொள்ளை பிரியம் அவருக்கு ஒரு நாள் கூட எனக்கு "குட் நைட்" சொல்லாமல் தூங்கியதும் இல்லை "குட் மோர்னிங்" சொல்லாமல் நாளை துவக்கியதும் இல்லை .

இப்படிப்பட்ட அண்ணன்களை பார்க்கும் பொழுது எனக்கு உடன் பிறந்த சகோதரன்கள் இல்லை என்ற ஏக்கமும் இல்லை அப்புடியே இருந்து இருந்தாலும் இவர்களை போல் இருப்பார்களா என்பது சந்தேகமே :)                                                


Sunday, 10 April 2011

எல்லோரும் வி ஐ பி களே


என் மனதை வெகு நாட்களாக வருத்தி கொண்டு இருக்கும் விஷயம் இது .இந்த விஷியத்தை வெளியில் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்த பொழுது ஒரு நாள் தேனக்கா இடம் சென்று பேசுகையில் இதை பற்றி விவாதித்தேன் அவர்களும் இதை கண்டிப்பாக வலையில் எழுது அப்பொழுது தான் ஒவ்வொருத்தருக்கும் தான் யார் என்பது புரியும் என்றார்கள் , ஆகையால் இதோ என் கட்டுரை

நான் சமிப காலத்தில் சில கலை துறையை சேர்ந்த பிரபலமான  நபர்களை பார்க்க நேரிட்டது . அவர்களில் சிலர் நாம் அனைவருடனும் நன்றாக பழக வேண்டும் , அனைவரும் சுலபமாக நம்மை அணுக வேண்டும் என்று நினைகிறார்கள் ஆனால் திடீர் என்று நான் பிரபலமானவன் (celebrity ) என்ற எண்ணம் (கொம்பு ) வந்து விடுகிறது.அது ஏன் என்று எனக்கு புரியவில்லை, அது அவர்கள் செய்யும் தொழில் அவ்ளவே.அந்த தொழிலில் தலைகனம் வருவதற்கு என்ன இருக்கிறது. இதில் வேறு  அவர்கள் எப்பவாவுது நம்மை தொடர்பு கொண்டு அப்பொழுது நம்முடைய வேலை பளுவில் பேச முடியாமல் போனால் இப்புடி சொல்லுவார்கள் "நான் பேசமடேனான் என்று எத்தணை பேர் ஏங்குகிறார்கள் ,காத்து கிடக்கிறார்கள் அப்புடி பட்ட நான் உன்னிடம் பேச ninaithathu   என் தவறு " என்று சொல்லுகிறார்கள். 

சிறிது நாளைக்கு முன்பு ஒரு நடிகரின் மகள் பிறந்தநாளுக்கு சென்றேன் அப்பொழுது அவரிடம் நிறைய பேர்  புகை படம் எடுத்து கொண்டு இருந்தனர் , ஒரு சிலரிடம் அவர் நீங்கள் ஒரு பிரபலமனவருடன் (celebrity )  புகை படம் எடுத்ததால் நீங்கள் சந்தோஷ பட வேண்டும் என்று சொன்னார் , பத்தடி தள்ளி இருந்த நான் இதை கேட்ட உடன் மிகவும் கோப பட்டேன். எப்புடியாவுது அவருக்கு இதை மனம் புண்படாமல் அவர் பேசியது தவறு என்று உணர்த்த நினைத்தேன், அந்த நேரம் பார்த்து அந்த நடிகர் என்னுடன் புகை படம் எடுக்க வந்தார் அப்பொழுது விளையாட்டாக நான் சொனேன் "நீங்கள் சந்தோஷ பட வேண்டும்  காரணம் நீங்கள் ஒரு இளைய பெண் முதலாளியுடன் புகை படம் எடுத்து கொள்கிறீர்கள் " என்று சொன்ன உடன் அவர் முகம் மாறியது , அப்பொழுது சொன்னேன் நீங்கள் அந்த நண்பருக்கு எப்புடி சொன்னீர்களோ அப்புடி தான் நானும் உங்களிடம் விளையாட்டாக கூறினேன் என்று சொன்னேன்.

இதே போல் ஒரு நாள் பிரபல இயக்குனர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது அவரும் தன்னை ஒரு பெரிய ஆளாக நினைத்து கொண்டு தான் தலைகனத்தோடு மற்றவர்களுடன் பழகுவதை பெருமையாக என்னிடம் பேசினார். எனக்கோ கோவம் உச்சிக்கு ஏறிவிட்டது  அப்பொழுது நான் சொன்னேன் "நீங்கள் இப்படி பேசுவது தவறு, எல்லோரையும் விட நீங்கள் பெரிய வி ஐ பி என்று சொல்லாதீர்கள் காரணம் நீங்கள் எங்களை போன்றோர்களுக்கு பொழுது போக்கு அவ்வளவு தான் , இப்படி எனக்கு போர் அடித்தால் மட்டுமே பார்குற உங்களை தலையில் தூக்கி கொண்டு அட முடியாது என்னால்" என்று சொல்லிவிட்டேன் , இது நான் கோவத்தால் உரைத்தது மட்டும் அல்ல, அவர்களுக்கு அவர்கள் யார் என்று உண்மைய புரிய வைக்க எண்ணி வேதனையோடு தான் இப்படி பேசினேன். எனக்கும் தெரியும் அவர்கள் ஒரு படம் தயாரிக்க ஆரம்பித்து அது ரிலீஸ் செய்கிற வரையில் எவ்வளவு கஷ்டம் என்று ஆனால் அது அவர்களுடைய தொழில் கஷ்டப்பட்டு தான் ஆகவேண்டும் , அதற்காக மற்றவர்களிடம் தான் ஒரு பெரிய அந்தஸ்தில் உள்ளவர் போலும் மற்றவர்கள் எல்லாம் ஐந்துக்கும் பத்துக்கும் அலைபவர்கள் போலும் என்று எண்ணி பேசுவது தவறு , அது மட்டும் இன்றி தன்னை மற்றவர்கள் புகழ வேண்டும் என்று எண்ணி பொய்யான அன்புடன் தனக்கு கீழ் உள்ளவர்களுடன் பழகுபவர்களும் பார்த்திருக்கிறேன் ,அப்புடி ஒரு பொய்யான நட்பு எதற்கு ?தயவு செய்து மகா ஜனங்களே புரிந்து கொள்ளுங்கள் சினிமா என்பது பொழுது போக்கு விஷயம் மட்டும் தான், நீங்கள் உங்கள் தொழிலில் உழைப்போது போல் தான் கலைஞர் களும் அவர்கள் துறையில் உழைக்கிறார்கள்.அவர்களை கடவுளாக எண்ணி வாழ்கையை வீணடித்து கொள்ளாதீர்கள்.எனக்கு புரியவில்லை அவர்களுக்கு தலைகனம் ஏன் வர வேண்டும் என்று , எல்லோர் மாதிரி தான் அவர்களும் அன்றாட வாழ்க்கைக்காகவும் ,பணம் சம்பதிபதர்க்காகவும் தான் உழைக்கிறார்கள் அவ்ளோ தானே தவிர இதில் அவர்கள் இப்புடி நடந்து கொள்ள அவசியமே இல்லை .தான் ஏதோ பெரிய சாதனை செய்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் இதில் வேறு சினிமா துறையை மற்ற தொழிலுடன் வேற ஒப்பிட்டு அதுவும் மருத்துவம் மற்றும் பொறியியல் துறையோடு ஒப்பிட்டு பேசுவது வேடிக்கையாக உள்ளது , எல்லா தொழிலிலும் கஷ்டம் இருக்க தான் செய்யும் , ஒருவர் தொழிலை மற்றவர்கள் செய்ய முடியாது.

எல்லோரும் அவர் அவர் தொழிலில் வல்லுனர்களே. நான் சிறு வயதிலிருந்தே தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞரை அருகில் இருந்து பார்த்து, பேசி வளர்ந்தவள், ஆகையால் என்னை பொருத்தவரையில் தமிழகத்தில் தான் பிறந்ததற்காக சாதித்தவர்கள்  டாக்டர்.கலைஞர் அவர்களும் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் தான் ,இவர்களுக்கும்  மேலாகவா சாதித்து விட்டார்கள் ?

Friday, 11 March 2011

இயற்கை அன்னையின் கோபம்

அன்பின் சுவருபமாய் , அமைதியின் திரு உருவமாய் இருந்த உனக்குள் இத்தனை கோபமா ?உன்னை கடவுளாக  என்னியதுனால நீ இத்தனை பலிகளை வாங்கி கொண்டாய் ?
      நாட்டில் நடக்கும் பல அக்கிறமங்களை பொறுக்க மாட்டாமல் இவர்கள் எல்லாம் வாழ்வதற்கே.லாயக்கு அற்றவர்கள் என்பதால் கோபம் கொண்டாயோ ?

அல்லது தலை கனத்தோடு பணக்கரனாய் திரியும் மனிதர்களை "பணம் ,சொத்துக்கள் இருந்தால் எதையும் விலைகொடுத்து வாங்கி விடலாம்  யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்காதே , நான் நினைத்தால் உன்னை ஒரு நிமிடத்தில் ஓட்டாண்டி அக்கி நடுத்தெருவில் நிறுத்த முடியும்" என்பதை காட்டவா கோபம் கொண்டாய் ?


ஏற்ற தாழ்வு பார்க்கும் மனிதர்களுக்கு இவ்வளவு தான் உன் வாழ்கை என்று நிருபிபதர்கா உன் கோபத்தை காண்பித்தாய் ?

   அன்னையே உனக்கு எதிராய் முன்னேற்றம் என்ற பெயரால் விஞ்ஞானத்தின் மேல் பழி போட்டு அவர்களின் வசிதிக்காக உன்னை இடித்து,குடைந்து , துன்புறுத்தி ,மாசு படுத்தி , உன் மேல் மேலும் மேலும் பாரங்களை ஏற்றுவதினால் வலி தாங்காமல் என்னால் பொறுக்க முடிய வில்லையடா  என்று பிளைந்து கொண்டு உன் உக்கிரத்தை காண்பித்தாயோ?
இப்பொழுது  சொல் அம்மா உன் உக்கிர கோபத்திருக்கு யார் காரனம்?

Monday, 7 March 2011

நன்றிகள் பல

இணையதளம் என்றாலே நல்லதுக்கு இல்லை கெட்டுப்போவதற்கு தான் என்று சொல்லுவதை உடைதெரிந்தவர்கள் என் முகப்புத்தக ஆண்  நண்பர்கள்.


மைகேல், பாலா,சரோ,அணில் , பிரபு,ராம், ஷங்கர்  மற்றும் மில்லர் , நண்பர்கள் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று உதாரனத்துக்குரியவர்கள்.

ஒரு சகோதரனாய் செல்வா அண்ணா
                             
 எந்த எதிர்பார்ப்பும் இன்றி பழகுபவர், மற்றவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களை வெளியில் கொண்டுவருபவர், ஒரு ஈகோ இல்லாத மனிதர் .எனக்கு எதாவுது மனகஷ்டம் என்றாலோ அல்லது ஒரு ஆலோசனை வேண்டும் என்றாலோ முதலில் அவரிடம் தான் கேட்பேன் பேசுவேன்.மொத்தத்தில் எனக்கு ஒரு சொந்த சகோதரன் இல்லாத குறையை தீர்த்து கொண்டு இருப்பவர். அவரை காட் பாதர் என்றும் சொல்லலாம், ஐ லவ் யு அண்ணா :).

இதை அனைத்தையும் மீறி இடு செய்யமுடியாதது  அன்பு( அன்புச்சு இது நட்பின் பாசமாக நான் அழைக்கும் பெயர், என் குடும்பத்தாரும் அப்படி தான் அவனை அழைப்பார்கள்)வின் நட்பு
                                     
 எங்களுக்குள் எத்தனையோ கருத்துவேறுபாடுகள் வரும் அதற்காக பெரிய சண்டையும்  வரும் ஆனால் கோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் இன்பது போல அவனின் பாசம் அளவற்றது .உதரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியை சொல்லு கிறேன்,போன வருடம்  நான் வந்தவாசியில் மங்களம் என்னும் ஒரு கிராமத்திற்கு எனது தாய் உடன் ஓய்வுக்க சென்றேன் அங்கு எங்களுக்கு ஒரு பண்ணை வீடு உள்ளது, நான் சென்ற இரண்டாம் நாள் இரவு சுமார் பதினொரு மணி இருக்கும் திடீர் என்று எனக்கு நெஞ்சு வலி எடுத்தது, அந்த வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான் இருக்கிறோம், நான் துடிப்பதை பார்த்து அம்மாவும் பயந்து பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்க சென்று விட்டாங்க, அந்த நேரம் பார்த்து அன்புச்சு உடைய கால் வந்தது, வலியை பொறுத்து கொண்டு சிறிது நேரம் கழித்து பேசுகிறேன் என்று கூறு கட் செய்தேன், என் குரலை வைத்து யுகிதானா என்று தெரியவில்லை அடுத்தநாள் காலை ஏழு மணிக்கு அவன் வந்து  என்னை எழுப்பி எப்புடி இருகிறாய் என்று கேட்டான் , என்னால் அந்த நிமிடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சந்தோஷத்தில் அழுது விட்டேன். அவன் பயணம் செய்து வந்த துரம் சென்னயில் இருந்து 230 கி .மி. அன்றிலிருந்து இன்று வரை வெளியூர் நான் செல்ல வேண்டி இருந்தால் என் பெற்றோரின் அனுமதியுடன் கூட வருவான். எவ்ளோ பெரிய சண்டை நடந்தாலும் அடுத்த ஐயிந்தவுது நிமிடம் சாரி அம்மு என்று இறங்கி வருபவன் அவனே முதல். எனக்கு எல்லா விஷியத்திலும் சரி என்னுடைய பணியுளும் சரி எனக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பவன்.இன்று பல பேர் எங்களுடைய நட்பை தவறாக பேசினாலும் அவன் சொல்லும் ஒரே வார்த்தை "நம்மை பற்றி பேசுவதற்கு இரண்டு குடும்பங்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு  ஒன்று உனது பெற்றோர் இன்னொன்று எனது குடும்பம்.நம் நட்பை புரிந்து கொண்டவர்கலோடு நாம் இருப்போம் , மற்றவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை " என்று சொல்லுவான்.இந்த மகளிர் தினத்தில் நான் அன்புச்சுவுக்கு நன்றி சொல்வதில் பெருமை கொள்கிறேன்.கடைசி வரை இந்த நட்பு இப்புடியே இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் . 

Sunday, 6 March 2011

Naanum blog ezhudhuren

Dear friends,


Naanum blog ezhudha aarambichi iruken.. konjam enakku support pannunga, ezhuthu thuraike naan pudhusu:)..Pala vishiyangal vechi iruken ezhudhuvadharku..pakkalam konjam konjamaga..unga anaivarin uthuzhaippu thevai enakku.

Nandri