Sunday 10 April 2011

எல்லோரும் வி ஐ பி களே


என் மனதை வெகு நாட்களாக வருத்தி கொண்டு இருக்கும் விஷயம் இது .இந்த விஷியத்தை வெளியில் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்த பொழுது ஒரு நாள் தேனக்கா இடம் சென்று பேசுகையில் இதை பற்றி விவாதித்தேன் அவர்களும் இதை கண்டிப்பாக வலையில் எழுது அப்பொழுது தான் ஒவ்வொருத்தருக்கும் தான் யார் என்பது புரியும் என்றார்கள் , ஆகையால் இதோ என் கட்டுரை

நான் சமிப காலத்தில் சில கலை துறையை சேர்ந்த பிரபலமான  நபர்களை பார்க்க நேரிட்டது . அவர்களில் சிலர் நாம் அனைவருடனும் நன்றாக பழக வேண்டும் , அனைவரும் சுலபமாக நம்மை அணுக வேண்டும் என்று நினைகிறார்கள் ஆனால் திடீர் என்று நான் பிரபலமானவன் (celebrity ) என்ற எண்ணம் (கொம்பு ) வந்து விடுகிறது.அது ஏன் என்று எனக்கு புரியவில்லை, அது அவர்கள் செய்யும் தொழில் அவ்ளவே.அந்த தொழிலில் தலைகனம் வருவதற்கு என்ன இருக்கிறது. இதில் வேறு  அவர்கள் எப்பவாவுது நம்மை தொடர்பு கொண்டு அப்பொழுது நம்முடைய வேலை பளுவில் பேச முடியாமல் போனால் இப்புடி சொல்லுவார்கள் "நான் பேசமடேனான் என்று எத்தணை பேர் ஏங்குகிறார்கள் ,காத்து கிடக்கிறார்கள் அப்புடி பட்ட நான் உன்னிடம் பேச ninaithathu   என் தவறு " என்று சொல்லுகிறார்கள். 

சிறிது நாளைக்கு முன்பு ஒரு நடிகரின் மகள் பிறந்தநாளுக்கு சென்றேன் அப்பொழுது அவரிடம் நிறைய பேர்  புகை படம் எடுத்து கொண்டு இருந்தனர் , ஒரு சிலரிடம் அவர் நீங்கள் ஒரு பிரபலமனவருடன் (celebrity )  புகை படம் எடுத்ததால் நீங்கள் சந்தோஷ பட வேண்டும் என்று சொன்னார் , பத்தடி தள்ளி இருந்த நான் இதை கேட்ட உடன் மிகவும் கோப பட்டேன். எப்புடியாவுது அவருக்கு இதை மனம் புண்படாமல் அவர் பேசியது தவறு என்று உணர்த்த நினைத்தேன், அந்த நேரம் பார்த்து அந்த நடிகர் என்னுடன் புகை படம் எடுக்க வந்தார் அப்பொழுது விளையாட்டாக நான் சொனேன் "நீங்கள் சந்தோஷ பட வேண்டும்  காரணம் நீங்கள் ஒரு இளைய பெண் முதலாளியுடன் புகை படம் எடுத்து கொள்கிறீர்கள் " என்று சொன்ன உடன் அவர் முகம் மாறியது , அப்பொழுது சொன்னேன் நீங்கள் அந்த நண்பருக்கு எப்புடி சொன்னீர்களோ அப்புடி தான் நானும் உங்களிடம் விளையாட்டாக கூறினேன் என்று சொன்னேன்.

இதே போல் ஒரு நாள் பிரபல இயக்குனர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது அவரும் தன்னை ஒரு பெரிய ஆளாக நினைத்து கொண்டு தான் தலைகனத்தோடு மற்றவர்களுடன் பழகுவதை பெருமையாக என்னிடம் பேசினார். எனக்கோ கோவம் உச்சிக்கு ஏறிவிட்டது  அப்பொழுது நான் சொன்னேன் "நீங்கள் இப்படி பேசுவது தவறு, எல்லோரையும் விட நீங்கள் பெரிய வி ஐ பி என்று சொல்லாதீர்கள் காரணம் நீங்கள் எங்களை போன்றோர்களுக்கு பொழுது போக்கு அவ்வளவு தான் , இப்படி எனக்கு போர் அடித்தால் மட்டுமே பார்குற உங்களை தலையில் தூக்கி கொண்டு அட முடியாது என்னால்" என்று சொல்லிவிட்டேன் , இது நான் கோவத்தால் உரைத்தது மட்டும் அல்ல, அவர்களுக்கு அவர்கள் யார் என்று உண்மைய புரிய வைக்க எண்ணி வேதனையோடு தான் இப்படி பேசினேன். எனக்கும் தெரியும் அவர்கள் ஒரு படம் தயாரிக்க ஆரம்பித்து அது ரிலீஸ் செய்கிற வரையில் எவ்வளவு கஷ்டம் என்று ஆனால் அது அவர்களுடைய தொழில் கஷ்டப்பட்டு தான் ஆகவேண்டும் , அதற்காக மற்றவர்களிடம் தான் ஒரு பெரிய அந்தஸ்தில் உள்ளவர் போலும் மற்றவர்கள் எல்லாம் ஐந்துக்கும் பத்துக்கும் அலைபவர்கள் போலும் என்று எண்ணி பேசுவது தவறு , அது மட்டும் இன்றி தன்னை மற்றவர்கள் புகழ வேண்டும் என்று எண்ணி பொய்யான அன்புடன் தனக்கு கீழ் உள்ளவர்களுடன் பழகுபவர்களும் பார்த்திருக்கிறேன் ,அப்புடி ஒரு பொய்யான நட்பு எதற்கு ?தயவு செய்து மகா ஜனங்களே புரிந்து கொள்ளுங்கள் சினிமா என்பது பொழுது போக்கு விஷயம் மட்டும் தான், நீங்கள் உங்கள் தொழிலில் உழைப்போது போல் தான் கலைஞர் களும் அவர்கள் துறையில் உழைக்கிறார்கள்.அவர்களை கடவுளாக எண்ணி வாழ்கையை வீணடித்து கொள்ளாதீர்கள்.



எனக்கு புரியவில்லை அவர்களுக்கு தலைகனம் ஏன் வர வேண்டும் என்று , எல்லோர் மாதிரி தான் அவர்களும் அன்றாட வாழ்க்கைக்காகவும் ,பணம் சம்பதிபதர்க்காகவும் தான் உழைக்கிறார்கள் அவ்ளோ தானே தவிர இதில் அவர்கள் இப்புடி நடந்து கொள்ள அவசியமே இல்லை .தான் ஏதோ பெரிய சாதனை செய்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் இதில் வேறு சினிமா துறையை மற்ற தொழிலுடன் வேற ஒப்பிட்டு அதுவும் மருத்துவம் மற்றும் பொறியியல் துறையோடு ஒப்பிட்டு பேசுவது வேடிக்கையாக உள்ளது , எல்லா தொழிலிலும் கஷ்டம் இருக்க தான் செய்யும் , ஒருவர் தொழிலை மற்றவர்கள் செய்ய முடியாது.

எல்லோரும் அவர் அவர் தொழிலில் வல்லுனர்களே. நான் சிறு வயதிலிருந்தே தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞரை அருகில் இருந்து பார்த்து, பேசி வளர்ந்தவள், ஆகையால் என்னை பொருத்தவரையில் தமிழகத்தில் தான் பிறந்ததற்காக சாதித்தவர்கள்  டாக்டர்.கலைஞர் அவர்களும் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் தான் ,இவர்களுக்கும்  மேலாகவா சாதித்து விட்டார்கள் ?