Thursday 12 April 2012

நெருஞ்சி ஒரு பார்வை

                                                     
"நெருஞ்சி" திரு .காலகாலன் அவர்கள் எழுதிய கவிதை தொகுப்பு நூல். எழுத்தாளர் அவர்கள் இந்த நூல் வெளியிட்ட நாள் அன்றே நீங்கள் தான் இந்த நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். சகோதரன் டிஸ்கவரி புக் பலேஸ் வேடியப்பன் அவர்கள் இந்த விமர்சனத்தை தனக்கு தெரிந்த பத்திரிக்கையில் போடுகிறேன் இன்று சொன்னார் , நானும் எழுதி கொடுத்து வெகு நாட்கள் ஆகி விட்டது  ஆனால் இன்னும் எந்த பத்திரிக்கையிலும் வந்ததாக தெரியவில்லை.அதனால் கொஞ்சம் விரிவாக இங்கு எழுதுகிறேன் இந்த "நெருஞ்சி" கவிதை தொகுப்பு நூலை எனது பார்வையில் இருந்து.


                                                          "நெருஞ்சி "
                                                 எனது பார்வையில்


       அது ஒரு சிறு முள் ஆனால் அது காலில் குத்தினால் வலி உயிர் போய்விடும்.இந்த கவிதை நூலும் அப்புடியே தான் , நெருஞ்சி முள்ளாய் இதயத்தை குத்தி கிழிகின்ற  விஷியங்காளாய் விளங்குகிறது இந்த "நெருஞ்சி " என்னும் கவிதை நூல்.பல சமுக அவலங்களை எடுத்துரைகின்றது இந்த "நெருஞ்சி".இன்று கவிதைகள் எழுதும் வட்டம் சிறிது காரனம் இன்று தமிழ் படத்திற்கே தமிழில் சப் - டைட்டில் போட்டால் தான் நமக்கு புரியும் பட்சத்தில் நாம் எங்கே கவிதை தமிழை படித்து புரிந்து கொள்வது .ஆனால் கவிஞர் காலகாலன் அவர்களின் எழுத்தோ மிகவும் அருமை , எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி இருகின்றார். இந்த கவிதை தொகுப்பில் அவர் தொடாத விஷியங்கலே இல்லை என கூறலாம். சொல்ல போனால் இது வெறும் கவிதைகள் அல்ல வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனின் உண்மை முகங்களை தோல் உரித்து காட்டியுள்ளார்.

                       
"பத்திரம் " என்னும் தலைப்பில் ஒரு கவிதை படித்த பொழுது எனக்கு சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பள்ளியின் தீ விபத்தில கருகி பலியான 120 குழந்தைகளின் நினைவு வந்து என் கண்கள் கலங்கியது.பிஞ்சு குழந்தைகள் எண்ணி நான்கு வயது கூட நிரம்பிடாத மொட்டுக்கள் கருகியதே.இந்த விபத்தை யாரால் மறக்க முடியும்
.
பத்திரம்

பள்ளி சமையலறையிலிருந்து
பற்றிக்கொண்ட தீயில்
கருகி நூற்றியிருபது
குழந்தைகள் சாவு -
நல்லவேளை
பத்திரமாய் இருந்தது
புதிதாய் வாங்கிய
கூரைகள் !
மொட்டுக்கள் கருகியதற்க்கு யாரை குற்றம் சொல்வது? பள்ளியின் தலைமையியா ?, இல்லை கட்டிடம் கட்டினவர்களையா?

இன்றைக்கு அடி தட்டு மனைவிகளின் நிலையை பாருங்கள்.கர்ப்பிணி  மனைவி கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து பணத்தை கொண்டுவந்தால் காத்திருந்து களைப்பாகி போன கணவன் மதுக் கடை நோக்கி . இது எவ்வளவு ஒரு ஈனமான  செயல்
"பகலெல்லாம்
கல்லுடைத்து வீடு
திரும்பினாள்
கர்ப்பிணி
காத்திருந்து களைப்பில்
மதுக் கடை நோக்கி
கணவன்"
நம்மில் பல பேர் இப்புடி பட்டவாழ்கையை அனுபவித்து கொண்டு தான் இருகின்றார்கள் என்று தெரியாது.

இன்று பல பேருக்கு கனவுகள் கனவுகளாகவே தான் இருகின்றது அது எவ்ளோ ரணத்தை குடுக்கும் என்பது நமக்கு தெரியும் , கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நமக்கே இப்புடி என்றால்
"எங்கள்
குப்பத்துச் சிறுவர்களின்
கனவுகள் கூட
கண்டிப்பாய்,
கருப்பு வெள்ளையில்
தான்."
வறுமையில் வாடுபவர்களை என்ன சொல்வது, கவிஞன் இதை விட  எப்படி உணர்ச்சியாக விளக்க முடியும்.
வறுமை ஒன்றே நாய்களுக்கும் சாலையோர சிறுவர்களுக்கும் ஒற்றுமையான ஒரே விஷயம். இப்புடி நிறைய பேர் இருப்பது தெரியாமல் நாம் காசு கொடுத்து வாங்கும் உணவை கூட  வயிறு நிறைந்தால் மிச்சத்தை வைத்து விடுகிறோம், அன்பர்களே நாம் அவர்களுக்கு பெரிதாக ஏதும் செய்யா விட்டாலும் பரவாயில்லை மிச்சம் வைக்கும் உணவை போட்டாலும் மடித்து இது போல் வறுமையில் வாடுபவர்களுக்கு கொடுத்து உதவுங்கள், அரை வயிறேனும் நிறைந்த சந்தோஷத்தில் அவர்கள் இருப்பார்கள்.

பெண் சிசுக் கொலை இன்றும் பல்வேறு மூளைகளில் நடந்து கொண்டு தான் இருகின்றது,  எத்தனை விழிப்புணர்வு உண்டாக்கினாலும் நடந்து கொண்டு இருக்கின்ற விஷயம் இது. இந்த விஷியத்தில் கவிஞர் கண்டித்தே எழுதி இருகின்றார்

"போதுமிந்த
ஈனச்செயல்
நிறுத்திக் கொள்ளுங்கள் -
இல்லையேல்
இன்னும் சில ஆண்டுகளில்
உங்கள் மகன்
தனியாய்த் திரிய வேண்டும்
இல்லை
திருநங்கைத் தான்
மணக்க வேண்டும் ."
இது அத்தனைக்கும் காரனம் வறுமை, இந்த வறுமைக்கு யாரை நோவது?

வறுமையில் தான் எத்தனை விதமான தொழில்கள் அடங்கு கின்றது  பிச்சை எடுப்பது , பெண் சிசு வதைக்க படுவது, புத்தகத்தை எந்த வேண்டிய கைகள் மூட்டை சுமக்கின்றது, சிறுமிகள் விபச்சாரம்,
ஐயஹோ  கடவுளே இவர்களுக்கு ஒரு வழி பிறக்காதா என்று இந்த நூலை படிக்கும் நமக்கு கேக்க தோன்றும்.

வரதட்சனை பிரச்னையை பற்றி பேசும் பொழுது

"பையன் பட்டம் பெற்று விட்டான்
தரகர் இனி தாராளமாய்
விலை பேசலாம்"
இதோ இனோன்றையும் சொல்கிறேன்
" பெண் வீட்டு
வாசற்கதவில் ,
"
மலிவு விலையில் மணமகன் வேண்டும் ".

ஆண்களே சற்றே சிந்தியிங்கள் இனியும் இது தொடர்ந்தால் உங்களை ஒரு மனிதனாக பார்க்காமல் ஒரு பொருளாக பார்க்கும் காலம் வரும், ஒரு ஜட  பொருளுக்கு என்ன மரியாதையோ அதை தான் உங்களுக்கும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்பதை உணருங்கள்..

நம் நாட்டின் சட்டத்தில் உள்ள கிழிசல்களை ஒரு ஏழை பெனின் கிழிந்த சேலையோடு கவிஞர் ஒப்பிட்டு பார்த்திருப்பது பொருத்தமே.
சாதியை பற்றி மிக அழகா சொல்லி இருக்கிறார் கவிஞர்  "
மதம்
ஒரு வகையில் யானையும் மனிதனும் ஒன்று தான்
அது யாருக்கு பிடித்தாலும் அழிவு நிச்சியம்.”

 இந்த தொகுப்பில் உறவுகள் பற்றியும் நிறைய சொல்லி இருகின்றார் கவிஞர் அதில் ஒன்று
"இப்பொழுது விடுமுறை இல்லாத காரணத்தால்
அப்பாவின் முதலாம் ஆண்டு
தவசத்திற்கு
அவசியம் வருவதாய்
அமெரிக்காவிலிருந்து
அவசரச்செய்தி அனுப்பினான்
மகன் !"
இதற்க்கு பெயர்தான் கடமையா? இன்றைய தலை முறையினருக்கு நாளைக்கு இதே நிலைமை தனக்கும் வரும் என்பதை கவிஞர் நமக்கு உணர்த்தியுள்ளார்.

இந்த நூல் வெறும் வறுமையை மட்டும் சொல்ல வில்லை , வரதட்சனை கொடுமை , சட்டத்தின் நேர்மை இன்மை, சாதி பிரச்சனை, உறவுகள், தீவிர வாதம் , என்று இப்புடி பல பல சமுக சீர்கேடுகளை நமக்கு காட்டியுள்ளார் கவிஞர் . இந்த தொகுப்பில் உள்ள கருத்துக்களை மிகவும் தைரியமாக எடுத்து உரைத்து இருகின்றார்  கவிஞர் காலகாலன், அவருக்கு நன்றிகள் பல.
இன்றைய மக்கள் மனதில் இருக்கும் இருக்கும் வன்மத்தை கீறி எடுக்கவும் நாளை சந்ததியினர் புரையோடி போகாமல் இருக்கவும் இந்த "நெருஞ்சி " நிச்சியமாக உதவும்.

                                                              செல்வி.கயல்விழி லக்ஷ்மணன்