உறை
அணுக்களை தானம் செய்யலாம்
ஒரு மாதம் முன்பு
புதவையில் உள்ள
என்னுடைய நண்பர்
ஒருவர்தொலைபேசியில்
என்னை அழைத்து
சிவா சங்கரன்
என்னும் ஒரு
13 வயதுசிறுவன்
புற்றுநோயால் பாதிக்க பட்டு ஈரோட்டில் இருந்து
சென்னை உள்ளபிரபல அடையார்
கேன்சர் மருத்துவமனையில்
மிகவும் சீரிசான
நிலையில்அனுமதிக்க
பெற்றுள்ளான் , அவனுக்கு இரத்தம் தேவை படுகிறது
அனால்இப்புடி
ஒரு சிறுவன்
இருப்பது பொய்யா
அல்லது மெய்யா
என்றுதெரியவில்லை
நீ எதற்கும்
நேரில் சென்று
ஆராய்ந்து உண்மை
என்றால்அவனுக்கு
தேவையான உதவிகளை
செய் என்று
சொன்னார் அந்த
சிறுவனின்தாயின்
தொலைபேசி என்னை
என்னிடம் கொடுத்தார்.
நானும் அடுத்த
நாள்காலையில்
சென்றபொழுது அந்த சிறுவன் அவசர சிகிச்சை
பிரிவில்இருந்தான்
, அவனை அப்புடியே
படுக்கையிலேயே பார்த்து விட்டு அவனின்தாயாரையும்
நேரில் சென்று
பார்த்து ஊர்ஜிதம்
செய்த பின்னர்
மருத்தவரிடம்சென்று அவன் நோயை பற்றி
விசாரித்தேன், அவனுக்கு இரத்தபுற்று நோய்என்றும்
அதை பரிசோதனை
செய்து ஊர்ஜிதம்
பண்ண அவனுடைய
எலும்புமஜ்ஜையில்
( Bone marrow ) இருந்து இரத்தம் எடுத்தோம்
அந்த எடுத்த
இடத்திலஇரத்தம்
இன்னும் நிற்க
வில்லை அதனால்
அவனுக்கு ரத்தப்போக்குஇருப்பதாகவும்
அதற்க்கு தினமும்
ரத்தத்தில் உள்ள உறை அணுக்களை (platelets ) ரெண்டு unit ஏற்ற வேண்டும் . இரத்தம்
நின்றால் தான்
அவனுக்குமேற்கொண்டு
சிகிச்சை செய்ய
முடியும் என்று
சொல்ல பட்டது.
இந்த செய்தியை முக புத்தகத்தில் சகோதரர் வசந்த் அவர்களுடன் இணைந்து முக புத்தகத்தில் நிலை தகவல்கள் போட்ட உடன் பல நுற்றுகனக்கான நண்பர்கள் ரத்ததானம் செய்ய மருத்துவமனைக்கு வந்தார்கள், நானும் இரத்தம் அந்த சிறுவனுக்காக கொடுக்கலாம் என்று எண்ணி ரத்த வங்கியில் உள்ள மருத்துவரை அணுகினேன் அப்பொழுது தான் எனக்கு பல விஷியங்கள் எனக்கு தெரியவந்தது.அதாவது
1.பெண்களின் ரத்தத்தில் உள்ள உறை அணுக்களை எடுக்க மாட்டார்கள், காரனம் உறை அணுக்களின் எண்ணிக்கை பெண்களுக்கு கம்மி என்றும் அப்புடியே எடுத்தாலும் அது திரும்பி நம் ரத்தத்தில் உருவாகுவதற்கு தாமதம் ஆகும் .
2.ஆண்களுக்கு எண்ணிக்கை சரியாக இருக்கும். ரதத்திலிருந்து உறை அணுக்களை பிரித்து எடுத்தாலும் உடலில் மூன்று நாளில் உருவாகிவிடும்.
3.இந்த உறை அணுக்கள் புற்று நோய் கொண்டவர்களுக்கும் மட்டும் இல்லை யாருக்கு அடிப்பட்டு இரத்தம் நிற்காமல் இருந்தாலும் இந்த உறை அணுக்கள் செலுத்தப்படும்.
4.சாதாரணமாக ரத்ததானம் செய்யும் பொழுது 350 m l இரத்தம் மட்டுமே எடுப்பார்கள் ஆனால் உறை அணுக்களை மட்டும் தானம் கொடுக்கும் பொழுது வெறும் 300 ml இரத்தம் மட்டுமே எடுத்து உறை அணுக்களை பிரித்து எடுத்தவுடன் இரத்தம் மீண்டும் உடலுக்குள் சென்று விடும்.
5.இதற்கும் ரத்ததானம் போல் தான் நம் எடை 60 kg மேல இருக்க வேண்டும்.
6.ரத்த வங்கியில் இந்த உறை அணுக்களை மூன்று நாளைக்குமேல் வைத்துகொள்ள மாட்டார்கள் காரனம் மூன்று நாளைக்குமேல் அந்த அணுக்கள் இறந்து விடும்.அதனால் 24 மணி நேரத்திற்குள் அந்த உறை அணு நோயாளிக்கு (patient ) செலுத்தப்படும்.
7.ரத்ததானம் செய்வதால் வரும்
நன்மைகளில்
இதுவும்
ஒன்று,
புது
இரத்தம்
ஊருவதுடன்
புது
உறை
அணுக்களும்
அதன்
கூடவே
நமக்கு
கிடைகின்றது.
8. இந்த
உறை அணுக்கள்
தானத்தை எந்த
ரத்த பிரிவினரும்
கொடுக்கலாம். முன்று நாளில் generate ஆகிவிடும்.
இந்த உறை அணுக்கள்
நம் உடம்பில்
வெறும் ஏழு
நாள் வரையே
பயணம்செய்து
அழிய கூடியது.ஆகையால் இதை
தானம் செய்தால்
அவசர கால உதவியாக
பயன் படும்.
நல்லது செய்ய
நமக்கு மனதுண்டு,
தயக்கம் மட்டுமே தடைக்கல், அதுவும்
சில விளக்கம்
சரியாக கிடைக்கப்பெறாத காரணத்தால்தான்.அந்த
ரத்த வங்கி
மருத்துவர் எனக்கு விளக்கி கூறியது என்னுள்
எப்படிஒரு
விழிப்புணர்ச்சி ஏற்ப்பட்டதோ உங்களுக்கும் விழிப்புணர்வு வரவேண்டும்என்பதற்காக இதை பகிர்ந்து கொள்கிறேன்.
மனிதம் வளர்க்க முன் வாருங்கள்.
மனிதம் வளர்க்க முன் வாருங்கள்.
What is the English term for உறை அணுக்கள்? Please clarify
ReplyDeletePlatelets
Deleteஅருமையான மருத்துவப் பதிவு. இரத்த உறை அணுக்கள் (platelets) பற்றிய அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி Kayalvizhi Lakshmanan.
Please avoid Word Verification.
Nandri sir
Deletenice sharing.... thanks for the information.
ReplyDeleteThank u sir
Deleteஅருமையான மருத்துவப் பதிவு....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வலைப்பூ தலையங்க அட்டவணை
info@ezedcal.com
http//www.ezedcal.com
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி. இதோ
http://blogintamil.blogspot.com/2015/01/4_23.html?showComment=1421971764341#c6362785305064150399
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சரத்தில் திருமதி மனோ சாமிநாதன் தங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/
வணக்கம்!
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com
(இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)