என் மனதை வெகு நாட்களாக வருத்தி கொண்டு இருக்கும் விஷயம் இது .இந்த விஷியத்தை வெளியில் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்த பொழுது ஒரு நாள் தேனக்கா இடம் சென்று பேசுகையில் இதை பற்றி விவாதித்தேன் அவர்களும் இதை கண்டிப்பாக வலையில் எழுது அப்பொழுது தான் ஒவ்வொருத்தருக்கும் தான் யார் என்பது புரியும் என்றார்கள் , ஆகையால் இதோ என் கட்டுரை
நான் சமிப காலத்தில் சில கலை துறையை சேர்ந்த பிரபலமான நபர்களை பார்க்க நேரிட்டது . அவர்களில் சிலர் நாம் அனைவருடனும் நன்றாக பழக வேண்டும் , அனைவரும் சுலபமாக நம்மை அணுக வேண்டும் என்று நினைகிறார்கள் ஆனால் திடீர் என்று நான் பிரபலமானவன் (celebrity ) என்ற எண்ணம் (கொம்பு ) வந்து விடுகிறது.அது ஏன் என்று எனக்கு புரியவில்லை, அது அவர்கள் செய்யும் தொழில் அவ்ளவே.அந்த தொழிலில் தலைகனம் வருவதற்கு என்ன இருக்கிறது. இதில் வேறு அவர்கள் எப்பவாவுது நம்மை தொடர்பு கொண்டு அப்பொழுது நம்முடைய வேலை பளுவில் பேச முடியாமல் போனால் இப்புடி சொல்லுவார்கள் "நான் பேசமடேனான் என்று எத்தணை பேர் ஏங்குகிறார்கள் ,காத்து கிடக்கிறார்கள் அப்புடி பட்ட நான் உன்னிடம் பேச ninaithathu என் தவறு " என்று சொல்லுகிறார்கள்.
சிறிது நாளைக்கு முன்பு ஒரு நடிகரின் மகள் பிறந்தநாளுக்கு சென்றேன் அப்பொழுது அவரிடம் நிறைய பேர் புகை படம் எடுத்து கொண்டு இருந்தனர் , ஒரு சிலரிடம் அவர் நீங்கள் ஒரு பிரபலமனவருடன் (celebrity ) புகை படம் எடுத்ததால் நீங்கள் சந்தோஷ பட வேண்டும் என்று சொன்னார் , பத்தடி தள்ளி இருந்த நான் இதை கேட்ட உடன் மிகவும் கோப பட்டேன். எப்புடியாவுது அவருக்கு இதை மனம் புண்படாமல் அவர் பேசியது தவறு என்று உணர்த்த நினைத்தேன், அந்த நேரம் பார்த்து அந்த நடிகர் என்னுடன் புகை படம் எடுக்க வந்தார் அப்பொழுது விளையாட்டாக நான் சொனேன் "நீங்கள் சந்தோஷ பட வேண்டும் காரணம் நீங்கள் ஒரு இளைய பெண் முதலாளியுடன் புகை படம் எடுத்து கொள்கிறீர்கள் " என்று சொன்ன உடன் அவர் முகம் மாறியது , அப்பொழுது சொன்னேன் நீங்கள் அந்த நண்பருக்கு எப்புடி சொன்னீர்களோ அப்புடி தான் நானும் உங்களிடம் விளையாட்டாக கூறினேன் என்று சொன்னேன்.
இதே போல் ஒரு நாள் பிரபல இயக்குனர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது அவரும் தன்னை ஒரு பெரிய ஆளாக நினைத்து கொண்டு தான் தலைகனத்தோடு மற்றவர்களுடன் பழகுவதை பெருமையாக என்னிடம் பேசினார். எனக்கோ கோவம் உச்சிக்கு ஏறிவிட்டது அப்பொழுது நான் சொன்னேன் "நீங்கள் இப்படி பேசுவது தவறு, எல்லோரையும் விட நீங்கள் பெரிய வி ஐ பி என்று சொல்லாதீர்கள் காரணம் நீங்கள் எங்களை போன்றோர்களுக்கு பொழுது போக்கு அவ்வளவு தான் , இப்படி எனக்கு போர் அடித்தால் மட்டுமே பார்குற உங்களை தலையில் தூக்கி கொண்டு அட முடியாது என்னால்" என்று சொல்லிவிட்டேன் , இது நான் கோவத்தால் உரைத்தது மட்டும் அல்ல, அவர்களுக்கு அவர்கள் யார் என்று உண்மைய புரிய வைக்க எண்ணி வேதனையோடு தான் இப்படி பேசினேன். எனக்கும் தெரியும் அவர்கள் ஒரு படம் தயாரிக்க ஆரம்பித்து அது ரிலீஸ் செய்கிற வரையில் எவ்வளவு கஷ்டம் என்று ஆனால் அது அவர்களுடைய தொழில் கஷ்டப்பட்டு தான் ஆகவேண்டும் , அதற்காக மற்றவர்களிடம் தான் ஒரு பெரிய அந்தஸ்தில் உள்ளவர் போலும் மற்றவர்கள் எல்லாம் ஐந்துக்கும் பத்துக்கும் அலைபவர்கள் போலும் என்று எண்ணி பேசுவது தவறு , அது மட்டும் இன்றி தன்னை மற்றவர்கள் புகழ வேண்டும் என்று எண்ணி பொய்யான அன்புடன் தனக்கு கீழ் உள்ளவர்களுடன் பழகுபவர்களும் பார்த்திருக்கிறேன் ,அப்புடி ஒரு பொய்யான நட்பு எதற்கு ?தயவு செய்து மகா ஜனங்களே புரிந்து கொள்ளுங்கள் சினிமா என்பது பொழுது போக்கு விஷயம் மட்டும் தான், நீங்கள் உங்கள் தொழிலில் உழைப்போது போல் தான் கலைஞர் களும் அவர்கள் துறையில் உழைக்கிறார்கள்.அவர்களை கடவுளாக எண்ணி வாழ்கையை வீணடித்து கொள்ளாதீர்கள்.
எனக்கு புரியவில்லை அவர்களுக்கு தலைகனம் ஏன் வர வேண்டும் என்று , எல்லோர் மாதிரி தான் அவர்களும் அன்றாட வாழ்க்கைக்காகவும் ,பணம் சம்பதிபதர்க்காகவும் தான் உழைக்கிறார்கள் அவ்ளோ தானே தவிர இதில் அவர்கள் இப்புடி நடந்து கொள்ள அவசியமே இல்லை .தான் ஏதோ பெரிய சாதனை செய்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் இதில் வேறு சினிமா துறையை மற்ற தொழிலுடன் வேற ஒப்பிட்டு அதுவும் மருத்துவம் மற்றும் பொறியியல் துறையோடு ஒப்பிட்டு பேசுவது வேடிக்கையாக உள்ளது , எல்லா தொழிலிலும் கஷ்டம் இருக்க தான் செய்யும் , ஒருவர் தொழிலை மற்றவர்கள் செய்ய முடியாது.
எல்லோரும் அவர் அவர் தொழிலில் வல்லுனர்களே. நான் சிறு வயதிலிருந்தே தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞரை அருகில் இருந்து பார்த்து, பேசி வளர்ந்தவள், ஆகையால் என்னை பொருத்தவரையில் தமிழகத்தில் தான் பிறந்ததற்காக சாதித்தவர்கள் டாக்டர்.கலைஞர் அவர்களும் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் தான் ,இவர்களுக்கும் மேலாகவா சாதித்து விட்டார்கள் ?
// நீங்கள் எங்களை போன்றோர்களுக்கு பொழுது போக்கு அவ்வளவு தான்//
ReplyDeleteமிக சரியாக சொன்னீர்கள்.....
//தயவு செய்து மகா ஜனங்களே புரிந்து கொள்ளுங்கள் சினிமா என்பது பொழுது போக்கு விஷயம் மட்டும் தான், நீங்கள் உங்கள் தொழிலில் உழைப்போது போல் தான் கலைஞர் களும் அவர்கள் துறையில் உழைக்கிறார்கள்.அவர்களை கடவுளாக எண்ணி வாழ்கையை வீணடித்து கொள்ளாதீர்கள். ///
ReplyDeleteஅட்டகாசமான அட்வைஸ்...வாழ்த்துகள் வாழ்த்துகள்...இப்படி பயனுள்ளதாக எழுதியமைக்கு...
நானும் உங்கள் பாலோவரா ஆகிட்டேன்....
ReplyDeleteநிறைய இப்பிடி எழுதுங்கள். மக்களுக்கு விழிப்புணர்வு வரட்டும்....
நீங்கள் சொல்லும் நடிகர் யாருன்னு புரியுது, அவரை நான் சந்தித்தது இல்லை இருந்தாலும் அவர் ஒரு நல்ல நடிகர் என்பதை பாராட்டாமல் இருக்க முடியாது இல்லையா...
ReplyDeleteஅருமை, அருமை, தொடர்ந்து எழுதுங்கல் ஆனால் சட்றே பொருமையுடன் எழுத்து பிழைகளை தவிர்க்கலாம்.....
ReplyDeleteஅருமைடா கயல், சாட்டையடி...
ReplyDeleteஒவ்வொரு எழுத்தும் உண்மைகள்.
I have different opinion on your last paragraph.. Abdul kalam ok.. but no comments on other person.. Dont know what better he has done for TN?? In my opinion, TN could;ve been in better position if it was not given in his hand.
ReplyDeleteஇந்த போக்கு திரை உலக பிரபலங்களிடம் மட்டும் இல்லை... எனது உறவுக்கார பெண் ஒருவர் பிரபல ஆங்கில நாளேட்டின் நிருபர்... ஒரு விழாவில் அவர் இருக்கைக்கு அருகில் அமரச்சென்ற போது என்னமோ அவருடன் உட்காருவதால் நான் பிரபலமாகிவிடுவேன் என்பது போல ஒரே பந்தா... இந்த தான் பெரிய ஆள் என்ற நினைப்புதான் பல பேரின் பொழப்பை கெடுக்குது...
ReplyDeleteyes what you said is correct, many have this kind of superiority complex, and i too think the same if he/she is actor or any other thing , then its his /her profession that is it not more than anything , once paid for his/her services nothing he is rendering for free ..so its mere and mere supreme of his/her thinking..
ReplyDeleteஅன்புச் சகோதரிக்கு ..வாழ்த்துக்கள் .. தாங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ..மறுக்கமுடியாத செய்தியாகும் ! மக்கள் மாயையில் மூழ்கி ..திரைத் துறையினரை வானளவுக்கு தூக்கி வைத்து கொஞ்சுகின்றனர்..! ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்து அவர்கள் வாழ்க்கைக்கு வழி காட்டியவர்களை விட , எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை மனப்பான்மை செய்பவர்களை விட , ஒரு ஏழை மாணவனின் கல்விக்கு உதவி செய்பவர்களை விட ,இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்கள் இல்லை ...!துணிச்சலான ..அதே சமயம் நேர்மையான உங்களின் கருத்துக்கு வாழ்த்துக்கள் ..!
ReplyDeleteபாராட்டுவது தவறில்லை நாஞ்சில் சார், அந்த பாராட்டுதலை அவர்கள் தலையில் வைத்து கொண்டு ஆடுகிறார்கள்
ReplyDeleteஅடடா சார் நிச்சியமாக பிழைகளை தவிர்க்கிறேன்
ReplyDeleteநன்றி கணேஷ் அண்ணா
ReplyDeleteநல்ல பதிவு கயல். வாழ்த்துக்கள்
ReplyDeleteபழனிவேல் உங்களை பொருத்தவரை எப்புடியோ தெரியாது , என்னை பொருத்தவரை அவர் ஒரு சிறந்த அரசியல் சாணக்கியன் மற்றும் சிறந்த எழுத்தாளர்.5 முறை முதலமைச்சராய் இருப்பவர்.தூரத்தில் இருந்து பார்பவர்களுக்கு புறம் மட்டும் தான் பேச தெரியும் , அரசாங்கம் எவ்ளோ செய்தாலும் நாம் என்றைக்குமே திருப்தி அடையமாட்டோம் , குடுக்குற சலுகைகளையும் நமக்கு உபயோக படுத்த தெரியாமல் அவரை குறை சொல்லுவோம் ..அடுத்த தலை முறை பற்றி நான் பேசவில்லை , என்னை பொருத்தவரையில் அவர் வாழ்க்கையில் சாதித்து விட்டார், நீங்களும் நானும் சொல்லிகொள்கிற மாதிரி எதையும் சாதிக்க வில்லை
ReplyDeleteகுரு உண்மையே தாங்கள் உரைத்தது , ஆனால் இந்த கலை துறையில் அது ஜாஸ்தி
ReplyDeleteThank u shammi akka :)
ReplyDeleteநன்றி பாலு அண்ணா
ReplyDeleteநன்றி கீதா அக்கா
ReplyDeleteபழனிவேல் தமிழ் நாடு நன்றாக தான் உள்ளது , முடிந்தால் நீங்கள் தேர்தலில் நின்று சித்து முதலில் ஒரு MLA ஆகி உங்கள் தொகுதிக்கு என்ன செய்கிறீர்கள் என்று பார்போமா?
ReplyDeletekayal, there are celebrities. that's the way they are. one cannot change the system. you should let them be.they have worked hard to reach there.and lets face it, people do go ga-ga over them. would you not swoon if shah rukh or salman comes face to face with you?? so ,lady,take a chill pill... it is not easy to become a star. let them gloat... after all, nothing is permanent. aint it?
ReplyDeleteஅட..என் தங்கை இப்படிக் கூட எழுதுவாளா?
ReplyDeleteஉன் கோபம் நன்றாகத்தான் இருக்கிறது, நியாயமாகவும் இருக்கிறது.
கூடவே காயத்ரி சொல்லியிருப்பதையும் கவனிக்கவும்.
//
take a chill pill... it is not easy to become a star. let them gloat... after all, nothing is permanent. aint it?
//
நிலையில்லாத புகழின் உயரத்தில், அவர்கள் சிலகாலம் தான் நினைத்தபடியே இருந்துவிட்டுப் போகட்டும்.
கோபம் தவிர்த்து, அவர்கள் அவர்களாகவும், நாம் நாமாகவும் இருந்துவிடுவோம்.
நல்ல சிந்தனைகள்... இந்த தலைக்கனம் எல்லா துறைகளிலும் உண்டு.. அவர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் உண்மையான நட்பு மட்டுமே துணை நிற்கும். பதவியின் கடைசி நாள் சல்யூட் அடித்த வாச்மேன் கூட கண்டுக்க மாட்டன். சிலருக்கு இது புரிய தாமதம் ஆகிறது
ReplyDeleteGayu and selva anna, let them float adhula onnum thappillai but if u maintain a dignity continue that but when u want to be down to earth with everyone means muzhusa varanum, adha vitutu just because "paaru ivlo periya aalu namma kitta sagajama pazhagaraarunnu " andha pugazhchikaga pazhaga kudathu according to me adhu poiaana natpu thaan..I like shahrukhan but adhukaga i will not tell he is god, i don't mind whoever he is, if he is friendly with me with a good heart i will also be friendly with him, if he thinks that he is a superstar and he cannot move normally with the people and talking with the head weight means i also won't respect him even though he is my favourite hero, this is what iam trying to say
ReplyDeleteமைதிலி அக்கா எல்லா துறையுளும் தான் இருக்கீறார்கள் ஆனால் ஒரு அந்தஸ்தில் உள்ளவர்கள் என்றால் அவர் நட்பை கூட அவர்கள் சமமாகவே தான் வைத்து கொள்வார்கள் கீழே இறங்க மாட்டார்கள் ஆனால் இந்த துறையில் அப்புடி இல்லை அவர்கள் தான் பெரிய ஆட்கள் போலவும் மற்றவர்கள் எல்லாம் ஐந்துக்கும் பத்துக்கும் அலைபவர்கள் போலவும் பேசுபவர்கள்
ReplyDeletekayal.. unga katchila irunthu seat vanganumna kodi selavu seyyanum.. Dont tell that i havent achieved anything.. how come u can tell without knowing abt me and what am doing here.. You the one who is getting all these kind of support cuz of your grand fathers name.. and you are telling TN is in good shape .. If it so, then why your party members have given 500rs per vote in srirangam. If u want the proof i can give you that..Not only in Srirangam.. Every where .. These kind of bad things was initiated and established by MK. Come out of the party ..come out and see the common man and talk. I thought you were one who is really good and doing good even though u were from DMK family... But you also proved wrong.. You doing all this only to get name and fame for yourself... not in the public interest... If u want to see the real situation in TN and how people are suffering, come down here i will show you.. There is no meaning in talking to person who is from DMK party.. You always close your eyes and support it... I think we had a long discussion already on this.. But you didnt give answer on how "Cloud nine movies" and " Red Giant movies" started in a single day..And Kalaignar TV started in a single week.. As a entrepreneur, you should know the problems to start a company without any support... All corruption and these kind of buying seats was started by DMK.. And fyi, I voted only for DMK till last Lok sabha elections.. Just think why an DMK supporter should change like this.. Am i going to get any benefit out of by talking against DMK of MK.. Nothing.. I am trying to do something to make everyone know about corruption.. I am already doing something for POOR and different peoples here with my own money and I am not making advertisement on this to any one here.. I dont want such a stupid publicity on what am doing..I am happy with the wishes given by them.. Am telling this now only cuz, you asked me to become and MLA and do something. I think for doing something good i dont need to become an MLA and fyi all MLAs are not doing good even though they get elected. If they do good, they dont need to run out of the constituency where they contested last elections... Its applicable for all(not DMK or ADMK or anyother) .. You know very well who are all ran out of the constituency from the one they contested last elections...
ReplyDeleteஅப்படி எனக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் , என்னால் முடிந்த வரையில் நல்லது செய்வேன். தொகுதியை விட்டு ஓட மாட்டேன்.. அது போல என்னால் கடமை ஆற்ற முடிய வில்லை எனில் பதவியை ராஜினாமா செய்து விட்டு சும்மா இருப்பேனே தவிர, இன்று ராஜினாமா செய்வேன் , நாளை ராஜினாமா செய்வேன் என்று நாடகம் எல்லாம் நடத்த மாட்டேன்..
ReplyDeleteGood one kayal.. keep writing... :)
ReplyDelete