Monday, 7 March 2011

நன்றிகள் பல

இணையதளம் என்றாலே நல்லதுக்கு இல்லை கெட்டுப்போவதற்கு தான் என்று சொல்லுவதை உடைதெரிந்தவர்கள் என் முகப்புத்தக ஆண்  நண்பர்கள்.


மைகேல், பாலா,சரோ,அணில் , பிரபு,ராம், ஷங்கர்  மற்றும் மில்லர் , நண்பர்கள் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று உதாரனத்துக்குரியவர்கள்.

ஒரு சகோதரனாய் செல்வா அண்ணா
                             
 எந்த எதிர்பார்ப்பும் இன்றி பழகுபவர், மற்றவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களை வெளியில் கொண்டுவருபவர், ஒரு ஈகோ இல்லாத மனிதர் .எனக்கு எதாவுது மனகஷ்டம் என்றாலோ அல்லது ஒரு ஆலோசனை வேண்டும் என்றாலோ முதலில் அவரிடம் தான் கேட்பேன் பேசுவேன்.மொத்தத்தில் எனக்கு ஒரு சொந்த சகோதரன் இல்லாத குறையை தீர்த்து கொண்டு இருப்பவர். அவரை காட் பாதர் என்றும் சொல்லலாம், ஐ லவ் யு அண்ணா :).

இதை அனைத்தையும் மீறி இடு செய்யமுடியாதது  அன்பு( அன்புச்சு இது நட்பின் பாசமாக நான் அழைக்கும் பெயர், என் குடும்பத்தாரும் அப்படி தான் அவனை அழைப்பார்கள்)வின் நட்பு
                                     
 எங்களுக்குள் எத்தனையோ கருத்துவேறுபாடுகள் வரும் அதற்காக பெரிய சண்டையும்  வரும் ஆனால் கோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் இன்பது போல அவனின் பாசம் அளவற்றது .உதரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியை சொல்லு கிறேன்,போன வருடம்  நான் வந்தவாசியில் மங்களம் என்னும் ஒரு கிராமத்திற்கு எனது தாய் உடன் ஓய்வுக்க சென்றேன் அங்கு எங்களுக்கு ஒரு பண்ணை வீடு உள்ளது, நான் சென்ற இரண்டாம் நாள் இரவு சுமார் பதினொரு மணி இருக்கும் திடீர் என்று எனக்கு நெஞ்சு வலி எடுத்தது, அந்த வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான் இருக்கிறோம், நான் துடிப்பதை பார்த்து அம்மாவும் பயந்து பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்க சென்று விட்டாங்க, அந்த நேரம் பார்த்து அன்புச்சு உடைய கால் வந்தது, வலியை பொறுத்து கொண்டு சிறிது நேரம் கழித்து பேசுகிறேன் என்று கூறு கட் செய்தேன், என் குரலை வைத்து யுகிதானா என்று தெரியவில்லை அடுத்தநாள் காலை ஏழு மணிக்கு அவன் வந்து  என்னை எழுப்பி எப்புடி இருகிறாய் என்று கேட்டான் , என்னால் அந்த நிமிடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சந்தோஷத்தில் அழுது விட்டேன். அவன் பயணம் செய்து வந்த துரம் சென்னயில் இருந்து 230 கி .மி. அன்றிலிருந்து இன்று வரை வெளியூர் நான் செல்ல வேண்டி இருந்தால் என் பெற்றோரின் அனுமதியுடன் கூட வருவான். எவ்ளோ பெரிய சண்டை நடந்தாலும் அடுத்த ஐயிந்தவுது நிமிடம் சாரி அம்மு என்று இறங்கி வருபவன் அவனே முதல். எனக்கு எல்லா விஷியத்திலும் சரி என்னுடைய பணியுளும் சரி எனக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பவன்.இன்று பல பேர் எங்களுடைய நட்பை தவறாக பேசினாலும் அவன் சொல்லும் ஒரே வார்த்தை "நம்மை பற்றி பேசுவதற்கு இரண்டு குடும்பங்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு  ஒன்று உனது பெற்றோர் இன்னொன்று எனது குடும்பம்.நம் நட்பை புரிந்து கொண்டவர்கலோடு நாம் இருப்போம் , மற்றவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை " என்று சொல்லுவான்.இந்த மகளிர் தினத்தில் நான் அன்புச்சுவுக்கு நன்றி சொல்வதில் பெருமை கொள்கிறேன்.கடைசி வரை இந்த நட்பு இப்புடியே இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் . 

22 comments:

  1. எந்த எதிர்பார்ப்பும் இன்றி பழகுபவர், மற்றவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களை வெளியில் கொண்டுவருபவர், ஒரு ஈகோ இல்லாத மனிதர் .எனக்கு எதாவுது மனகஷ்டம் என்றாலோ அல்லது ஒரு ஆலோசனை வேண்டும் என்றாலோ முதலில் அவரிடம் தான் கேட்பேன் பேசுவேன்.மொத்தத்தில் எனக்கு ஒரு சொந்த சகோதரன் இல்லாத குறையை தீர்த்து கொண்டு இருப்பவர். அவரை காட் பாதர் என்றும் சொல்லலாம், ஐ லவ் யு அண்ணா :).


    ...cho chweet! We love You, annaa!!!!!!! You are a great inspiration to us.

    ReplyDelete
  2. கயல், ரொம்ப பெருமையா இருக்குடா.

    அன்பு , உனக்கும் என் வாழ்த்துக்கள். அருமைடா..

    ReplyDelete
  3. செல்வாண்னே , உங்களுக்கு , உங்கள் நட்புக்கு ராயல் சல்யூட்.

    ReplyDelete
  4. அன்பின் கயல், உன் புதிய முயற்சியான வலைப்பூக்கு வாழ்த்துகள். முதல் பதிவும் அருமை. வாழ்த்துகள்.

    உன் இயல்பான நடை நன்றாக இருக்கிறது. நிறைய எழுத வேண்டும்.

    ””எல்லாப்புகழும் இண்டர்நெட்டுக்கே””

    ReplyDelete
  5. அன்பு தோழியின் ...அன்புக்குள் நானும் இருப்பதில் அளவில்லா சந்தோசம்....ஒரு சந்தேகம்......!!!! நீ சொல்லுறது எல்லாம் உண்மையா !!!சும்மா காமெடி பண்ணலையே .....( தலைப்பு thamaasu...nu இருக்குல்ல அதுதான் கேட்டேன் !!!) சூப்பர் மச்சி !!!we too proud of u ma dear ....

    ReplyDelete
  6. அருமை டா

    ReplyDelete
  7. தங்கை கயல்,
    வலைப் பூக்கள் உலகிற்கு உன்னை அன்புடன் வரவேற்கிறேன்.

    சகோதரன் அன்பு, எல்லோருக்கும் பிடித்தமானவன். இதைப் படித்தவுடன், அவனை எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

    ReplyDelete
  8. அருமை கயல்... செல்வா அண்ணன் அப்படித்தான்.. நீ சொல்ல வந்ததை அருமையா எழுதியிருக்கம்மா... சகோதரன் அன்புவை பற்றி கேட்ப்பதற்க்கு மிகவும் பொறாமையாக இருக்குது... நமக்கு இப்படி ஒருவர் இல்லையே என்று... நல்ல நாள்ல எழுதத் துடங்கிய கயலுக்கு வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  9. thq u ammu , dear friends thx a lot

    ReplyDelete
  10. கயல் அன்பு கலக்குறீங்க..

    அக்காவின் அன்பு உங்கள் இருவருக்கும்..:)

    ReplyDelete
  11. அனைவருக்கும் வணக்கம் .. ! சகோதரன் அன்பு சொல்வது போல .. ஆண் பெண் நட்பை புரிந்து கொள்ளாதவர்களின் சொல்லும் சொல்லுக்கு ..நாம் மதிப்பு அளிக்கத் தேவையில்லை என்பதே என் கருத்தும் ..!
    எனக்கும் ..முகநூலிலே ..முகம் பார்த்து அறியாத சகோதரிகள் உண்டு , அவர்கள் காட்டும் அன்பு ,பாசம் ..என்னை சில நேரம் அழ வைத்துவிடும் .. !இந்த தூய்மையான அன்பு ..பாசமான அன்பு எனக்கு என் வாழ் நாள் முழுவதும் என் சகொதரிகளிடமிருந்து கிடக்க வேண்டுமாய் ..வேண்டுகிறேன் ! .."மகளிர் தின நல்வாழ்த்துக்கள்"
    வாழ்க வளமுடன் ..!

    ReplyDelete
  12. செல்வா அண்ணா உங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை பத்தாது :)
    @மில்லு உண்மை தான் மச்சி , அது தலைப்பு மாத்த தெரியல ,அடுத்த தடவ மாறி வரும்
    @நன்றி அணைத்து அக்காகளுக்கும் :)
    @அன்புச்சு :)
    @நன்றி காவேரி அண்ணா
    @தமிழ் அக்கா நிக் எனக்கு அப்பா மாதிரி :-p

    ReplyDelete
  13. நன்றி பாலு அண்ணா

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. அன்புள்ள இதயம் என்று சிலர் சொற்களால் காண்பித்து
    வார்த்தை என்ற அளவிலும் ..
    தங்களது வேண்டுதல் கொள்கை என்று அப்பட்ட
    பொய்களைச் சொன்னவர்களில் நான் அன்பு இழந்த போது என் அன்பான உணர்வுகளை மதித்ததும் என் கவலைகளை உடைத்தெறிந்த எனது சித்தி என்று அழைக்கும் விழிச்சித்தியும் அன்பு என்ற பொருளுடன்.
    வாழும் அண்ணாவும் இனி ஒரு உதாரண அன்புள்ள இதயங்கள் என்றதாய்..

    என்றும் மென்மையான பெண்மை மனமே..
    தாய்மை அவள் ஆயிரம் கோபக்காரணங்கள் சாட்டினாலும் பெண் உன்னதமான அன்பு..

    என்றும் மகளீர் தினத்தை மனமாற இன்முகத்துடன்
    மகிழ்ச்சிகள் அடைந்து விடுதலை பெற்று என்றும் வாழ என் இறைவன் வரம் கொடுக்கப்பிரார்த்திக்கின்றேன்.

    இப்படிக்கு ..
    உங்கள் தம்பி..
    யாழ்பாணம்.
    .யாழகிலன்.

    ReplyDelete
  17. கண்கள் பனிக்க எழுதறேன் கயல். என்றும் நட்புகளோடு மகிழ்வாய் இருக்க வாழ்த்துகள்.
    சக வலைப்பதிவராய் எனது கயலும்.

    ReplyDelete
  18. நட்பில் கிடைத்த உன்னத உறவுகள் பற்றி மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்
    கயல்.வாழ்த்துகள் .....

    ReplyDelete
  19. FaceBook க்கினை சரியாகப் பயன்படுத்துபவர்களில் நீங்களும் ஒருவர்... உங்கள் நண்பர்களும் அப்படியே... வாழ்த்துகள்... கூடவே படிச்சவேன்..ஒண்ணாவே வேல பாக்குறவேன்... சொந்தக்காரேன்... இப்படி அத்தனபேரும் நம்மள எப்படா கவுப்பாய்ங்கனு பயந்துக்கிட்டே இருக்கிற உலகில... Facebook மூலம மட்டுமே நட்பாகி ஒருத்தருக்கொருத்தர் இவ்வளவு உதவியா இருக்காங்கன்னா அது உண்மையிலேயே பாரட்டப்பட வேண்டிய விஷயம்தான்... உங்கள் நட்பு வட்டம் விரியட்டும், அதில் நானும் ஒரு சிறு புள்ளியாய் இருப்பதில் மகிழ்ச்சியே...

    ReplyDelete
  20. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா மேடம்?

    ReplyDelete