Tuesday, 20 May 2014

விவாசாயமும் அதை சார்ந்திருந்தவர்களின் நிலையும்

வனக்கம், ஹா கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது நான் வலை பதிவில் எழுதி.வேலை பலு காரனமாக என்னங்களை பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது...இனி அடிக்கடி எழுத முயற்ச்சிக்கின்றேன்.

சில நாட்களுக்கு முன்பு திரு.சோழ நாகராஜன் அவர்கள் அவரின் பத்திரிக்கைக்காக "விவசாயத்தை சார்ந்தவர்களின் இன்றைய நிலை" பற்றி ஒரு பேட்டி கட்டுரை கேட்டார், அந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு 

                                                

  விவாசாயமும் அதை சார்ந்திருந்தவர்களின் நிலையும்


நம் நாட்டில் இன்றைய விவாசாயமும் அதை சார்ந்திர்ந்தவர்களின் நிலை என்ன?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அடுத்த தலைமுறையினர்  விவசாயம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை தான் வர போகின்றது. இது மிகவும் வருந்த தக்க விஷியம். ஹ்ம் நாளை சாப்பட்டிற்க்காக் அடுத்த நாட்டினரிடம் கை ஏந்தும் சுழ்நிலை நிச்சயம் உண்டு நம் நாட்டிற்க்கு.
விவசாயத்தை நம்பி இருந்தவர்களின் இன்றைய நிலையை சிறிது பார்போமா.
என் பெயர் ராணி, எனக்கு திருமணம் ஆகி நாலு பொன்னு ஒரு பையன்.நான் 15 வருஷமா சென்னைல தான் குடி இருக்கேன். என் சொந்த ஊர் திருவண்னாமலை பக்கத்தில உள்ள செந்ஞி. பரம்பரை தொழில்னு பார்த்த விவசாயம் தான் எங்களுக்கு ஆனா இப்போ பயிர் வைக்கிறத விட்டுட்டு இங்க வந்துடோம்.இங்க சென்னைக்கு வந்து பல சிரம்மத்துக்கு இடையில வாழ்ந்துகிட்டு இருக்கோம்.
செந்ஞில எங்களுக்குன்னு ஒன்ற ஏக்கர் நிலம் இருந்தது அது எங்க பரம்பரையில கொடுத்தது. எங்க அம்மா அப்பா காலம் வரைக்கும் நல்லாத்தான் பயிர் செய்து வாழ்ந்தாங்க. இப்போ முடியல என்னு கேட்டிங்கன்ன, அப்போ இருந்த மனுஷங்க கூளிக்கு வேலை செஞ்சாலும் மனிதாபி மானத்தோட செய்து கொடுக்குற கூளியை மனசு நிறைவா வாங்கிட்டு போவாங்க, ஆனா இப்போ அப்பிடி இல்லை ஒரு நாளைக்கு 70ருபாய் கூளியும் கொடுத்து பத்தாதைக்கு ஒரு வேலை கறி சோறு ஆக்கி போட்ட கூட யாரும் வந்து வேலை பாக்க தயாரா இல்லை. காரனம் என்னான்னு பார்த்தா அவுங்களுக்கு கூளி பத்தாதாம் அதுனால இப்ப எல்லோரு கிராமத்தை விட்டு வெளியே வந்து சித்தாள் வேலை செய்யுறேன், கம்பெனில வேலை செய்யுறேன்னு கிளம்பிடுதுங்க.கேட்ட சித்தாள் வேலையில கூளி ஒரு நாளைக்கு 300 லேந்து 350 ருபாய் வறைக்கும் கிடைக்குதுன்னு எல்லாம் கிளம்பிடிசிங்க. அப்புறம் எப்புடி நாங்க பயிர் பன்ன முடியும்.
அதுனால கரம்பாவே கிடந்திச்சி, எத்தனன நாளைக்கு அப்பிடியே வருமானம் இல்லாமல் இருக்குறது, ஐந்து புள்ளைங்களை வேற பெத்து இருக்கேனே. சரி என்ன பன்னலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கும் பொழுது தான் அக்கம் பக்கம் இருந்தவங்க எல்லாம் சொன்னாங்கன்னு அஙக தயரா இருந்த ரியல் எஸ்டேட் காரன் கிட்ட நிலத்தை வந்த விலைக்கு வித்துட்டு மெட்றாஸ்க்கு பல கனவுகளோட குடும்பத்தோட வந்தோம் பொழைக்க.
இங்க சென்னையில எங்க தம்பி வீடு இருந்த்தால எடுத்தவுடனே கஷ்ட்டப்படல.என் பெர்ரிய பொன்னுக்கு கொண்டு வந்த காசுல தம்பி வீட்ல இருந்த 4 மாசத்தில ஒரு நல்ல பைய்யனா பார்த்து கல்யானம் பன்னி அனுப்பினேன், கொஞ்சம் அக்காடான்னு உட்க்கார்ந்தேன் ஆனா எத்தனை நாளைக்கு அப்பிடியே அவன் வீட்ல இருக்கிறது. அவனுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கிள்ள.தம்பி பொன்டாட்டி எத்தனை நாளைக்கு தான் எங்களை பொருத்துப்பா.
அதுவும் இவ்ளோ பெரிய குடும்பத்தை. அவ அவ குனத்தை காமிக்க அரம்பிச்சிட்டா.சரின்னு வேலை தேட அரம்பிச்சேன்.எல்லோரும் சொல்றாங்களேன்னு நானும் சித்தாள் வேலைக்கு போனேன். அந்த கட்டிடத்திலேயே தங்கி வாட்சுமேன் வேலையும் பாக்க சொன்னாங்க. சந்தோஷத்தோட புருஷனையும் புள்ளைங்களையும் என் கூடவே தங்க வெச்சிக்கிட்டேன்.ஆனா நிறைய விஷியங்களை அப்போ தான் தெரிஞ்சிக்கிடேன்.இந்த மோசமானா ஆம்பிளைங்க வாழ்ற இந்த சமுதாயத்துல எப்பிடி தைரியமா வாழ்னும்ன்னு கத்துக்கிட்டேன். தலையில பாண்டு துக்கும் பொழுதோ இல்ல செங்கள் சுமக்கும் பொழுதோ இந்த பெரிய ஆளும் மேஸ்த்திருங்களும் ரொம்ப கேவலமா பார்பானுங்க, தொடர்ந்து வேலை வேனும்ன்னா என் கூட அப்பாப்ப வந்து இருந்த தொடர்ந்து வேலை தருவேன்னு அப்பிடியே கேட்பானுங்க இல்லைன்னா உன் பொன்ன அனுப்புன்னு ரொம்ப கேவலமா பேசுவானுங்கோ, அப்பிடியே அங்க இருக்கின்ற செங்கள்ளாலேயே அவன் தலையை பொலக்கனும் போல இருக்கும், ஆனா ஒன்னும் பன்ன முடியாம பல்ல கடிச்சிக்கிட்டு சாதுரியமா பேசி அங்கிருந்து தப்பிச்சிடுவேன்.ஆனா இப்பாடியே எத்தனை நாளைக்கு ஓட்ட முடியும், எப்பிடியும் இந்த சென்னை விலை வாசில வாங்குற கூளி கைக்கும் வாய்க்கும் தான் சரியா இருந்தது.
இந்த நிலைமையில என் இரண்டாவது பொன்னு எங்க சொந்தக்கார பைய்யன் ஒருத்தனை அவளா திடிர்ன்னு கல்யானம் பன்னிக்கிட்டு வந்து நின்னா, உனக்கு கஷ்ட்டம் கொடுக்க வேனாம்ன்னு தான் அம்மா இந்த மாதிரி கல்யானம் பன்னிக்கிட்டேன்னு சொன்னா. அதுவும் சரி தான் நானா கட்டி கொடுக்க எது காசு.என் காதுல போட்டு இருந்ததை கழட்டி அவளுக்கு கொடுத்தனுப்பினேன்.இதே சித்தாள் வேலை இனி செய்ய கூடாதுன்னு முடிவு எடுத்தேன் வேற என்ன வேலை நமக்கு தெரியும், செய்யுற வேலையில ஒழுக்கம் இருக்கனும்.
ஒரு நாள் நான் வீட்ல சமைச்ச பாத்திரங்கள தேச்சிக்கிட்டு இருக்கும் பொழுது தோனிச்சி, இந்த மாதிரி  நாலு வீட்ல பத்து பாத்திரம் தேச்சா என்னான்னு, போய் முதல் வேலையா பக்கத்து வீட்ல போய் வீட்டு வேலை இருந்த கொடுங்கம்மான்னு கேட்டேன், அவுங்களும் உடனே சரின்னு சொல்லிட்டாங்க,அப்போ நான் வாங்கின சம்பளம் வெறும் 500ருபாய் ஆனா ஒழுக்கத்தோட உழச்ச காசு, மனசுக்கு நிறைவா இருந்தது. என் புருஷன் அந்த வீட்ல தோட்ட வேலை செய்வாரு, அவருக்கு ஒரு 500ருபாய், மொத்தம் 1000ருபாய்ல தான் எங்க குடும்பம் ஒடிச்சி, அப்புடியே இரண்டு முனுன்னு வீடுங்க கிடைச்சிது, கொஞ்சம் கொஞ்சமா சீட்டு கட்டி 5 சவரன் நகை போட்டு 3 வது பொன்ன கட்டிகொடுத்தேன்.
இதுக்கு நடுவுல என் பைய்யன் 10வது நல்ல மார்க் எடுத்து பாஸ் பன்னான்.இவ்வளவு கஷ்டத்துலெயும் அந்த புள்ள நல்லா படிச்சிது.அவன் படிச்ச கவர்மென்டு ஸ்கூல் தான் , அவன் முதல் மார்க் அவன் தான்.சும்மா சொல்ல கூடாது, நான் பட்ற கஷ்ட்டத்த பாத்து நல்லா நடந்துப்பான், அவனை எப்பிடியாவுது நல்லா படிக்க வைக்கனும் ஆசை எனக்கு, பாவம் புள்ள அவனுக்கு தேவையானத அவனே பார்த்தூப்பான், அதே மாதிரி 12வது நல்ல மார்க் எடுத்தான், அவன் மார்க்கு கவர்மென்ட்ல அவன் மேல் படிப்பிக்கு பண உதவி கிடைச்சிது.அவனும் இப்பொழுது காலேஜ் கடைசி வருஷம் படிக்கிறான்,இது வறைக்கும் எதிலும் பெயில் ஆகல.இந்த டிக்ரி முடிச்சி பெரிய டிக்ரி ஒன்னு படிக்கனும்னு சொல்றான்.
இப்பிடியே 3 பொன்னுங்களையும் கரை சேர்த்துட்டேன், பைய்யனை பத்தி கவலை இல்லை அவன் எப்பிடியும் படிச்சிஅவனுக்கு ஒரு வழிய பாத்துப்பான்.என் கடைசி பொன்னு க்கு பன்ன என்கிட்ட எதுவும் இல்ல பாவம் அது தான் நான் வேலை முடிச்சி பசி யோட வீட்டுக்கு வந்ததேன்னா உடனே தட்டுல சுட சுட சோறு  போடும். அது நேரம் என் வீட்டுக்காரருக்கும் ரொம்ப வயசானதால வெளில போய் வேலை செய்ய முடியல.இபொழுது ஒரு வீட்ட பார்த்துக்குறேன், அந்த வீட்டு ஒநர் வெளிநாட்டில் இருக்காங்க, கொஞ்சம் நாளைக்கு முன்னாடி ஒரு 10,000 ருபாய் சேர்த்து வெச்ச காசு திருட்டு போயிடுச்சி என் கஷ்ட்ட காலம், என்னத்த பன்றது அழுவுறத தவிர எனக்கு வேற எதுவும் தெரியல அவளோட 3 அக்கா மாருங்களும் அவளுக்கு நல்ல வரன் பாக்க சொல்றாங்க..அவுங்க 3 பெரும் காசு பங்கிட்டு கொடுக்குறோம்னு சொல்றாங்க.
இவ்வளவு கஷ்ட்டத்துக்கும் காரனம், எனக்கு பையிர் செய்ய முடியாத சுழ்நிலை வந்ததுனால தானே. நிலத்தில வேலை செய்ய ஆள் இல்லத்து தானே காரனம்.அதிக கூளிக்கு ஆசை பட்டு எல்லோரும் ஊர விட்டு வந்ததோட வினை தானே.அப்பிடி போறவங்க நல்லா சாம்பாதிச்சி வாழ்றாங்களான்னா அதுவும் இல்லை.இப்பிடி கஷ்ட்ட பட்றதுக்கு கிராமத்துல வருமானம் கம்மியா இருந்தாலும் நிம்மதிய மூச்சு விடலாம், மனசுக்கு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.கொஞ்சம் நஞ்சம் நிலம் வைச்சிறிக்கின்ற என்னை போன்றோர்களும் இப்பிடி எல்லா வற்றையும்  வித்துட்டு போக வேண்டிய அவசியம் இருந்திருக்காது.இந்த நிலைமை எப்பொழுது மாறும்ன்னு தெரியல.
இது ராணி அம்மாவின் போராட்டம் மட்டும் இல்லை.இன்று விவசாய நிலம் வைத்திருந்த 90% தினரின் நிலை இது தான்.ஆனால் ஒன்று நிச்சயம் இன்னும் 15வருடத்தில் யார் விவசாயம் செய்து கொன்டிருக்கின்றனறோ அவரே அன்றைய இந்தியாவின் பெரும் பனக்காரனாக இருப்பார்கள் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை..

                                                                                           செல்வி.கயல்விழி லக்ஷ்மனன்