எனக்கு இன்றும் ஞாபகம்
இருகின்றது முதன் முதலில் என்னை தமாஷாக கேலி செய்து முக புத்தகத்தில்
பேசியது , அது இன்று வரை தொடர்வது என்பது வேறு :). சரோ வும் சரி அவன்
மனைவி ரேணுவும் சரி அவர்கள் இருவரும் நட்பிற்கு காட்டும் அன்பிற்கு ஈடு
இணையே கிடையாது. அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை விட அவர்கள்
நட்பிற்கு காட்டும் நெருக்கம் அதிகம். சரோ விடம் மட்டுமே நான் கண்டேன்
அந்த புரிதலுடன் கூடிய நட்பு. யாரையும் நோகடிக்காத குணம் , பேச்சு இவை
இருண்டுமே அவனிடம் உள்ள பல சிறப்புகளில் ஒன்று . சரோ நீ வெளி நாட்டில்
(அமெரிக்க ) வாழ்ந்தாலும் எங்கள் கூடவே இருப்பதாகவே தான் என்ன தோன்றுகிறது.
சரோ நீ இங்கு வந்த பொழுது நாம் அடித்த கொண்டாட்டம் தான் எத்தனை எத்தனை ,
அனால் நீ வந்து திரும்பி செல்லும் பொழுது ஏனோ எங்களுக்கு சொல்லமுடியாத ஒரு
துக்கம் தொண்டையை அடைக்கும். நீ கிளம்பும் பொழுது போகதே டா என்று சொல்லும்
பொழுது சிறு பிள்ளை தனமாக இருந்தாலும் உள்ளத்தில் இருந்து வரும் உண்மையான
வார்த்தை அது. சமுக வலைத்தளம் முலமாக தூய்மையான நட்ப்புகள் கூட கிடைக்குமா
என்று நம் வட்டத்தை பார்த்து வியந்தவர்கள் உண்டு. சரோ உனக்கு ஞாபகம்
இருக்கும் இன்று எண்ணுகிறேன் , இரவில் நாம் மைகேல் சுவரில் கண்டதை எழுதி
அவன் போன் ஹாங் ஆகுற அளவுக்கு அடித்த அரட்டைகள் , அடுத்தநாள் காலையில் அவன்
போன் பார்த்து ஷாக் ஆகி நம் அனைவரையும் அன்பாக திட்டுவதும் ,உள்ள
டப்பியில் பேசி வைத்து வெளியில் நம் மற்ற சுவற்றில் எத்தனை கேலியாகவும்
கிண்டாலகவும் எழுதி இருப்போம், இபோழுது நம் வட்டத்தை சார்ந்தவர்கள் மிகவும்
பிஸியாகி விட்டார்கள் அந்த அளவுக்கு பேசுவதற்கு இப்பொழுது யாருக்கும்
நேரம் இல்லை ,என்ன தான் புது நட்ப்புகள் சேர்ந்தாலும் நாம் அனைவரும் ஒருவர்
மேல் ஒருவர் வைத்து இருக்கும் பாசமும் நேசமும் என்றும் குறைந்தது இல்லை
.சரோ நீ ,ரேணு, நான் ,ரம்யா ,பாலா ,மைகேல் இது சிறு வட்டமாக இருந்த பொழுது
இருந்த சந்தோஷம் இன்று வட்டம் பெரிதாகியதலோ அல்லது நேரமின்மை காரனாமாகவோ
அந்த சந்தோஷ தருணங்கள் இப்பொழுது இல்லை . அந்த நாட்கள் திரும்பி வருமா சரோ
?

நான் இப்பொழுது சற்று முன்னர் உனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல
உன்னிடம்
தொலை பேசியில் பேசினேன், பேசியது கொஞ்சம் நேரமாக இருந்தாலும் மனம் விட்டு
சிரித்தேன் , அதுவும் நான் வாய்ஸ் ரெகார்டரில் பேசியது உனக்கு உன் போன் (
உன்ன மாதிரியே )மொழி மாற்றம் செய்ததை நீ சொன்ன விதம் என்னால் சிரிப்பை
அடக்க முடியவில்லை . நீ வாய திறாந்தாலே நகைச்சுவை (மற்றவர்களை கலாய்ப்பது)
ஊற்று அப்புடியே வரும். நான் இரண்டு நாள் முக புத்தகம் வரவில்லை என்றால்
நீ உடனே அங்கிருந்து தொலை பேசியில் என்னை அழைத்து என்ன எது என்று
விசாரிப்பது ,"என்னடி தலைவலியா? இல்ல பின் முதுகு வலியா? என்று நீ அக்கறை
உடன் கேட்கும் பொழுது நான் கலங்கியது உண்டு.ஒவ்வொரு முறை நீ தொலை பேசியில்
பேசி முடித்து வைக்கும் பொழுது நீயும் சரி ரேணு வும் சரி "love u " அண்ட்
"miss u டி" என்று சொல்லி நீங்கள் போன் வைக்கும் பொழுது அந்த ஆழமான
பாசத்தின் வெளிபாடு யாருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது. மனசார நிஜம்மா
சொல்றேன் நீ , ரேணு , பசங்க நல்ல இருக்கணும் டா. :)