Tuesday, 20 May 2014

விவாசாயமும் அதை சார்ந்திருந்தவர்களின் நிலையும்

வனக்கம், ஹா கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது நான் வலை பதிவில் எழுதி.வேலை பலு காரனமாக என்னங்களை பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது...இனி அடிக்கடி எழுத முயற்ச்சிக்கின்றேன்.

சில நாட்களுக்கு முன்பு திரு.சோழ நாகராஜன் அவர்கள் அவரின் பத்திரிக்கைக்காக "விவசாயத்தை சார்ந்தவர்களின் இன்றைய நிலை" பற்றி ஒரு பேட்டி கட்டுரை கேட்டார், அந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு 

                                                

  விவாசாயமும் அதை சார்ந்திருந்தவர்களின் நிலையும்


நம் நாட்டில் இன்றைய விவாசாயமும் அதை சார்ந்திர்ந்தவர்களின் நிலை என்ன?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அடுத்த தலைமுறையினர்  விவசாயம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை தான் வர போகின்றது. இது மிகவும் வருந்த தக்க விஷியம். ஹ்ம் நாளை சாப்பட்டிற்க்காக் அடுத்த நாட்டினரிடம் கை ஏந்தும் சுழ்நிலை நிச்சயம் உண்டு நம் நாட்டிற்க்கு.
விவசாயத்தை நம்பி இருந்தவர்களின் இன்றைய நிலையை சிறிது பார்போமா.
என் பெயர் ராணி, எனக்கு திருமணம் ஆகி நாலு பொன்னு ஒரு பையன்.நான் 15 வருஷமா சென்னைல தான் குடி இருக்கேன். என் சொந்த ஊர் திருவண்னாமலை பக்கத்தில உள்ள செந்ஞி. பரம்பரை தொழில்னு பார்த்த விவசாயம் தான் எங்களுக்கு ஆனா இப்போ பயிர் வைக்கிறத விட்டுட்டு இங்க வந்துடோம்.இங்க சென்னைக்கு வந்து பல சிரம்மத்துக்கு இடையில வாழ்ந்துகிட்டு இருக்கோம்.
செந்ஞில எங்களுக்குன்னு ஒன்ற ஏக்கர் நிலம் இருந்தது அது எங்க பரம்பரையில கொடுத்தது. எங்க அம்மா அப்பா காலம் வரைக்கும் நல்லாத்தான் பயிர் செய்து வாழ்ந்தாங்க. இப்போ முடியல என்னு கேட்டிங்கன்ன, அப்போ இருந்த மனுஷங்க கூளிக்கு வேலை செஞ்சாலும் மனிதாபி மானத்தோட செய்து கொடுக்குற கூளியை மனசு நிறைவா வாங்கிட்டு போவாங்க, ஆனா இப்போ அப்பிடி இல்லை ஒரு நாளைக்கு 70ருபாய் கூளியும் கொடுத்து பத்தாதைக்கு ஒரு வேலை கறி சோறு ஆக்கி போட்ட கூட யாரும் வந்து வேலை பாக்க தயாரா இல்லை. காரனம் என்னான்னு பார்த்தா அவுங்களுக்கு கூளி பத்தாதாம் அதுனால இப்ப எல்லோரு கிராமத்தை விட்டு வெளியே வந்து சித்தாள் வேலை செய்யுறேன், கம்பெனில வேலை செய்யுறேன்னு கிளம்பிடுதுங்க.கேட்ட சித்தாள் வேலையில கூளி ஒரு நாளைக்கு 300 லேந்து 350 ருபாய் வறைக்கும் கிடைக்குதுன்னு எல்லாம் கிளம்பிடிசிங்க. அப்புறம் எப்புடி நாங்க பயிர் பன்ன முடியும்.
அதுனால கரம்பாவே கிடந்திச்சி, எத்தனன நாளைக்கு அப்பிடியே வருமானம் இல்லாமல் இருக்குறது, ஐந்து புள்ளைங்களை வேற பெத்து இருக்கேனே. சரி என்ன பன்னலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கும் பொழுது தான் அக்கம் பக்கம் இருந்தவங்க எல்லாம் சொன்னாங்கன்னு அஙக தயரா இருந்த ரியல் எஸ்டேட் காரன் கிட்ட நிலத்தை வந்த விலைக்கு வித்துட்டு மெட்றாஸ்க்கு பல கனவுகளோட குடும்பத்தோட வந்தோம் பொழைக்க.
இங்க சென்னையில எங்க தம்பி வீடு இருந்த்தால எடுத்தவுடனே கஷ்ட்டப்படல.என் பெர்ரிய பொன்னுக்கு கொண்டு வந்த காசுல தம்பி வீட்ல இருந்த 4 மாசத்தில ஒரு நல்ல பைய்யனா பார்த்து கல்யானம் பன்னி அனுப்பினேன், கொஞ்சம் அக்காடான்னு உட்க்கார்ந்தேன் ஆனா எத்தனை நாளைக்கு அப்பிடியே அவன் வீட்ல இருக்கிறது. அவனுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கிள்ள.தம்பி பொன்டாட்டி எத்தனை நாளைக்கு தான் எங்களை பொருத்துப்பா.
அதுவும் இவ்ளோ பெரிய குடும்பத்தை. அவ அவ குனத்தை காமிக்க அரம்பிச்சிட்டா.சரின்னு வேலை தேட அரம்பிச்சேன்.எல்லோரும் சொல்றாங்களேன்னு நானும் சித்தாள் வேலைக்கு போனேன். அந்த கட்டிடத்திலேயே தங்கி வாட்சுமேன் வேலையும் பாக்க சொன்னாங்க. சந்தோஷத்தோட புருஷனையும் புள்ளைங்களையும் என் கூடவே தங்க வெச்சிக்கிட்டேன்.ஆனா நிறைய விஷியங்களை அப்போ தான் தெரிஞ்சிக்கிடேன்.இந்த மோசமானா ஆம்பிளைங்க வாழ்ற இந்த சமுதாயத்துல எப்பிடி தைரியமா வாழ்னும்ன்னு கத்துக்கிட்டேன். தலையில பாண்டு துக்கும் பொழுதோ இல்ல செங்கள் சுமக்கும் பொழுதோ இந்த பெரிய ஆளும் மேஸ்த்திருங்களும் ரொம்ப கேவலமா பார்பானுங்க, தொடர்ந்து வேலை வேனும்ன்னா என் கூட அப்பாப்ப வந்து இருந்த தொடர்ந்து வேலை தருவேன்னு அப்பிடியே கேட்பானுங்க இல்லைன்னா உன் பொன்ன அனுப்புன்னு ரொம்ப கேவலமா பேசுவானுங்கோ, அப்பிடியே அங்க இருக்கின்ற செங்கள்ளாலேயே அவன் தலையை பொலக்கனும் போல இருக்கும், ஆனா ஒன்னும் பன்ன முடியாம பல்ல கடிச்சிக்கிட்டு சாதுரியமா பேசி அங்கிருந்து தப்பிச்சிடுவேன்.ஆனா இப்பாடியே எத்தனை நாளைக்கு ஓட்ட முடியும், எப்பிடியும் இந்த சென்னை விலை வாசில வாங்குற கூளி கைக்கும் வாய்க்கும் தான் சரியா இருந்தது.
இந்த நிலைமையில என் இரண்டாவது பொன்னு எங்க சொந்தக்கார பைய்யன் ஒருத்தனை அவளா திடிர்ன்னு கல்யானம் பன்னிக்கிட்டு வந்து நின்னா, உனக்கு கஷ்ட்டம் கொடுக்க வேனாம்ன்னு தான் அம்மா இந்த மாதிரி கல்யானம் பன்னிக்கிட்டேன்னு சொன்னா. அதுவும் சரி தான் நானா கட்டி கொடுக்க எது காசு.என் காதுல போட்டு இருந்ததை கழட்டி அவளுக்கு கொடுத்தனுப்பினேன்.இதே சித்தாள் வேலை இனி செய்ய கூடாதுன்னு முடிவு எடுத்தேன் வேற என்ன வேலை நமக்கு தெரியும், செய்யுற வேலையில ஒழுக்கம் இருக்கனும்.
ஒரு நாள் நான் வீட்ல சமைச்ச பாத்திரங்கள தேச்சிக்கிட்டு இருக்கும் பொழுது தோனிச்சி, இந்த மாதிரி  நாலு வீட்ல பத்து பாத்திரம் தேச்சா என்னான்னு, போய் முதல் வேலையா பக்கத்து வீட்ல போய் வீட்டு வேலை இருந்த கொடுங்கம்மான்னு கேட்டேன், அவுங்களும் உடனே சரின்னு சொல்லிட்டாங்க,அப்போ நான் வாங்கின சம்பளம் வெறும் 500ருபாய் ஆனா ஒழுக்கத்தோட உழச்ச காசு, மனசுக்கு நிறைவா இருந்தது. என் புருஷன் அந்த வீட்ல தோட்ட வேலை செய்வாரு, அவருக்கு ஒரு 500ருபாய், மொத்தம் 1000ருபாய்ல தான் எங்க குடும்பம் ஒடிச்சி, அப்புடியே இரண்டு முனுன்னு வீடுங்க கிடைச்சிது, கொஞ்சம் கொஞ்சமா சீட்டு கட்டி 5 சவரன் நகை போட்டு 3 வது பொன்ன கட்டிகொடுத்தேன்.
இதுக்கு நடுவுல என் பைய்யன் 10வது நல்ல மார்க் எடுத்து பாஸ் பன்னான்.இவ்வளவு கஷ்டத்துலெயும் அந்த புள்ள நல்லா படிச்சிது.அவன் படிச்ச கவர்மென்டு ஸ்கூல் தான் , அவன் முதல் மார்க் அவன் தான்.சும்மா சொல்ல கூடாது, நான் பட்ற கஷ்ட்டத்த பாத்து நல்லா நடந்துப்பான், அவனை எப்பிடியாவுது நல்லா படிக்க வைக்கனும் ஆசை எனக்கு, பாவம் புள்ள அவனுக்கு தேவையானத அவனே பார்த்தூப்பான், அதே மாதிரி 12வது நல்ல மார்க் எடுத்தான், அவன் மார்க்கு கவர்மென்ட்ல அவன் மேல் படிப்பிக்கு பண உதவி கிடைச்சிது.அவனும் இப்பொழுது காலேஜ் கடைசி வருஷம் படிக்கிறான்,இது வறைக்கும் எதிலும் பெயில் ஆகல.இந்த டிக்ரி முடிச்சி பெரிய டிக்ரி ஒன்னு படிக்கனும்னு சொல்றான்.
இப்பிடியே 3 பொன்னுங்களையும் கரை சேர்த்துட்டேன், பைய்யனை பத்தி கவலை இல்லை அவன் எப்பிடியும் படிச்சிஅவனுக்கு ஒரு வழிய பாத்துப்பான்.என் கடைசி பொன்னு க்கு பன்ன என்கிட்ட எதுவும் இல்ல பாவம் அது தான் நான் வேலை முடிச்சி பசி யோட வீட்டுக்கு வந்ததேன்னா உடனே தட்டுல சுட சுட சோறு  போடும். அது நேரம் என் வீட்டுக்காரருக்கும் ரொம்ப வயசானதால வெளில போய் வேலை செய்ய முடியல.இபொழுது ஒரு வீட்ட பார்த்துக்குறேன், அந்த வீட்டு ஒநர் வெளிநாட்டில் இருக்காங்க, கொஞ்சம் நாளைக்கு முன்னாடி ஒரு 10,000 ருபாய் சேர்த்து வெச்ச காசு திருட்டு போயிடுச்சி என் கஷ்ட்ட காலம், என்னத்த பன்றது அழுவுறத தவிர எனக்கு வேற எதுவும் தெரியல அவளோட 3 அக்கா மாருங்களும் அவளுக்கு நல்ல வரன் பாக்க சொல்றாங்க..அவுங்க 3 பெரும் காசு பங்கிட்டு கொடுக்குறோம்னு சொல்றாங்க.
இவ்வளவு கஷ்ட்டத்துக்கும் காரனம், எனக்கு பையிர் செய்ய முடியாத சுழ்நிலை வந்ததுனால தானே. நிலத்தில வேலை செய்ய ஆள் இல்லத்து தானே காரனம்.அதிக கூளிக்கு ஆசை பட்டு எல்லோரும் ஊர விட்டு வந்ததோட வினை தானே.அப்பிடி போறவங்க நல்லா சாம்பாதிச்சி வாழ்றாங்களான்னா அதுவும் இல்லை.இப்பிடி கஷ்ட்ட பட்றதுக்கு கிராமத்துல வருமானம் கம்மியா இருந்தாலும் நிம்மதிய மூச்சு விடலாம், மனசுக்கு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.கொஞ்சம் நஞ்சம் நிலம் வைச்சிறிக்கின்ற என்னை போன்றோர்களும் இப்பிடி எல்லா வற்றையும்  வித்துட்டு போக வேண்டிய அவசியம் இருந்திருக்காது.இந்த நிலைமை எப்பொழுது மாறும்ன்னு தெரியல.
இது ராணி அம்மாவின் போராட்டம் மட்டும் இல்லை.இன்று விவசாய நிலம் வைத்திருந்த 90% தினரின் நிலை இது தான்.ஆனால் ஒன்று நிச்சயம் இன்னும் 15வருடத்தில் யார் விவசாயம் செய்து கொன்டிருக்கின்றனறோ அவரே அன்றைய இந்தியாவின் பெரும் பனக்காரனாக இருப்பார்கள் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை..

                                                                                           செல்வி.கயல்விழி லக்ஷ்மனன்



Tuesday, 26 February 2013

14/6 A Day For Humanity

ஆஹா ரொம்ப நாள் ஆகிவிட்டது நான் வலைப்பதவில் எழுதி ..இது இன்று வந்து விட்டேன் :)

சென்ற வருடம் ஒரு பத்து  நிமிடமே மட்டுமே ஓட கூடிய ஒரு குறும்படம் ஏவிஎம் ஸ்டுடியோ வில் என்னுடைய சக முக புத்தக நன்பரும் அந்த படத்தின் இயக்குனருமான திரு.பாலாஜி சுப்பிரமனியம் அவர்கள் என்னை அந்த குறும் படத்தை பார்க்க அழைத்தார்கள்.நானும் பத்து நிமிடத்தில் என்ன தான் சொல்கிறார்கள் என்று பார்ப்போமே என்று சென்றேன்.உண்மைய சொல்ல வேண்டும் என்றால் நான் அதற்கு முன்பு பாலாஜியை பார்த்ததே கிடையாது.நான் அந்த முன்காட்சி அரங்கிற்குள்  நுழைந்த உடன்,அவர் ஓடோடி வந்து என்னை வரவேற்ற விதம் என்னை சிலிர்க்க வைத்தது,ஏதோ நெடுநாள் பழகிய நண்பன் போல :)


படத்தின் பெயர் 14/6 A  Day  for  Humanity, பெயரை  பார்த்த உடன் ஏதோ NDTV  நியூஸ் மாதிரி தெரிகிறது சரி சமுகத்துக்கு  ஏதோ சொல்ல நினைக்கிறார்கள்  என்று மட்டும் புரிந்தது. ஆம் நான் நினைதத்தர்க்கும் மேல விஷியத்தை சொல்லி இருகிறார்கள் மிக ஆச்சிரியமான விதத்தில். எனக்கு தெரிந்த வரையில் இதைவிட சிறப்பாக ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியாது என்பை ஆணித்தரமாக சொல்கிறேன்.

இதோ படத்தை பற்றி ஒரு பார்வை

                                                14/6

குப்பத்தில் வாழும் ஒரு இளம் வாலிபனைபெயர் "சிலுவை " எதிர் கோழ்டி ரௌடியினர் அருவளால் வெட்டுவதற்கு துறத்துக்கிரார்கள் , அவனோ தன்  உயிருக்கு பயந்து தப்பி ஓடிகிறான் , ஓடுகின்ற வழியில் ஒரு கல்லுரி வளாகத்துக்குள் ஒளிந்து கொள்வதற்காக நுழைகிறான், அப்பொழுது அந்த நேரத்தில் இரத்ததானம்  பற்றிய ஒரு விழிப்புணர்வு முகம் நடந்து  கொண்டு இருக்கின்றது. அப்பொழு  மருத்துவர் மாணவர்களிடம் இரத்ததானம்  செய்வதால் என்னன்னா பலன்கள் உண்டு  என்பதை விளக்கி விட்டு, முகாமை ஆரம்பிக்கின்றார். அப்பொழுது மறைய வந்த வாலிபனோ சிறுது யோசித்து விட்டு , இரத்ததானம்  செய்யும் இடத்திற்கு சென்று தானும் இரத்தம் கொடுக்க விரும்பு கின்றேன் என்று சொல்லு கிறான். மருத்துவர் அந்த வாலிபனை பரிசோதித்து விட்டு அவனை அடுத்த கட்ட பரிசோதனைக்கு இரத்த  பரிசோதனை செய்ய அனுப்புகிறார்.பரிசோதனையில் அவனுடைய இரத்தம் அறிய வகையான AB -ve  என்று தெரிய வருகிறது , பிறகு அவனது இரத்தத்தை பெற்று கொள்கிறார் , சிறிது நேரத்திற்கெல்லாம் மருத்துவருக்கு அவரின் மகனிடம் இருந்து ஒரு போன் கால் வருகிறது. அவன் தன நண்பனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று கூறுகிறான் , மருத்துவர் அவனை தன்  மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்கிறார்.மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவர் கால் செய்து அந்த விபத்துகுள்ளானவர்க்கு  AB-ve  இரத்தம்  தேவை படுகிறது என்று சொல்ல மருத்துவர் முகாமிலிருந்து அந்த  வாலிபன் சிலுவை கொடுத்த இரத்தத்தை  எடுத்து கொண்டு செல்கிறார் மருத்துவமனைக்கு...இங்கு தான் கதையின் திருப்பீடு (twist)..யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனை .நான் இங்க அந்த படத்தோட லிங்க் கடைசியா  ஒட்டுகிறேன்.அதை பார்தலே உங்களுக்கு தெரிய வரும் அந்த திருபீடு  என்ன , இரத்ததானம்  செய்வதால் எவ்ளோ பெரிய நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பார்த்து தெரிந்து கொள்வீர்கள்.


 பாலாஜி உங்களை பார்த்து தலை வணங்குகிறேன்,ஒரு மனிதன் அந்த இரத்ததானத் தால் அவன் திருந்தி அவன் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் விதம் சபாஷ் .இதற்க்கு மேல் ஒரு விஷியத்தின் முக்கியத்துவத்தை சமுதாயத்திற்க்கு எடுத்து கூற  இயலாது.இதை இவ்வள்வு  தாமதமாக எழுதுவதற்க்காக  வருந்துகிறேன். இதை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் இந்த படத்தை பார்த்து விட்டு மற்றவற்களுக்கும்  இந்த linkai  பகிர்ந்து ஒரு விழிபுணர்சியை ஏற்ப்படுத்துங்கள்.

Friday, 12 October 2012

சரோ விற்கு பிறந்த நாள்



எனக்கு இன்றும் ஞாபகம் இருகின்றது முதன் முதலில் என்னை தமாஷாக கேலி செய்து முக புத்தகத்தில் பேசியது , அது இன்று வரை தொடர்வது  என்பது வேறு :). சரோ வும் சரி அவன் மனைவி ரேணுவும் சரி அவர்கள் இருவரும் நட்பிற்கு காட்டும் அன்பிற்கு ஈடு இணையே கிடையாது. அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை விட அவர்கள் நட்பிற்கு காட்டும்  நெருக்கம் அதிகம். சரோ விடம் மட்டுமே நான் கண்டேன் அந்த புரிதலுடன் கூடிய நட்பு. யாரையும் நோகடிக்காத குணம் , பேச்சு இவை இருண்டுமே அவனிடம் உள்ள பல சிறப்புகளில் ஒன்று . சரோ நீ வெளி நாட்டில் (அமெரிக்க ) வாழ்ந்தாலும் எங்கள் கூடவே இருப்பதாகவே தான் என்ன தோன்றுகிறது. சரோ நீ இங்கு வந்த பொழுது நாம் அடித்த கொண்டாட்டம் தான் எத்தனை எத்தனை , அனால் நீ வந்து திரும்பி செல்லும் பொழுது ஏனோ எங்களுக்கு சொல்லமுடியாத ஒரு துக்கம் தொண்டையை அடைக்கும். நீ கிளம்பும் பொழுது போகதே டா என்று சொல்லும் பொழுது  சிறு பிள்ளை தனமாக இருந்தாலும் உள்ளத்தில் இருந்து வரும் உண்மையான வார்த்தை அது. சமுக வலைத்தளம் முலமாக தூய்மையான நட்ப்புகள் கூட கிடைக்குமா என்று நம் வட்டத்தை பார்த்து வியந்தவர்கள் உண்டு. சரோ உனக்கு ஞாபகம் இருக்கும் இன்று எண்ணுகிறேன் , இரவில் நாம் மைகேல் சுவரில் கண்டதை எழுதி அவன் போன் ஹாங் ஆகுற அளவுக்கு அடித்த அரட்டைகள் , அடுத்தநாள் காலையில் அவன் போன் பார்த்து ஷாக் ஆகி நம் அனைவரையும் அன்பாக திட்டுவதும் ,உள்ள டப்பியில் பேசி வைத்து வெளியில் நம் மற்ற சுவற்றில் எத்தனை கேலியாகவும் கிண்டாலகவும் எழுதி இருப்போம், இபோழுது நம் வட்டத்தை சார்ந்தவர்கள் மிகவும் பிஸியாகி விட்டார்கள் அந்த அளவுக்கு பேசுவதற்கு இப்பொழுது யாருக்கும் நேரம் இல்லை ,என்ன தான் புது நட்ப்புகள் சேர்ந்தாலும் நாம் அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்து இருக்கும் பாசமும் நேசமும் என்றும் குறைந்தது இல்லை .சரோ நீ ,ரேணு, நான் ,ரம்யா ,பாலா ,மைகேல் இது  சிறு வட்டமாக இருந்த பொழுது இருந்த  சந்தோஷம்  இன்று வட்டம் பெரிதாகியதலோ அல்லது நேரமின்மை காரனாமாகவோ அந்த சந்தோஷ தருணங்கள் இப்பொழுது இல்லை .  அந்த நாட்கள் திரும்பி வருமா சரோ ? 


நான் இப்பொழுது சற்று முன்னர் உனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல உன்னிடம் தொலை பேசியில் பேசினேன், பேசியது கொஞ்சம் நேரமாக இருந்தாலும் மனம் விட்டு சிரித்தேன் , அதுவும் நான் வாய்ஸ் ரெகார்டரில் பேசியது உனக்கு உன் போன் ( உன்ன மாதிரியே )மொழி மாற்றம் செய்ததை நீ சொன்ன விதம் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை . நீ வாய திறாந்தாலே நகைச்சுவை (மற்றவர்களை கலாய்ப்பது) ஊற்று அப்புடியே வரும்.  நான் இரண்டு நாள் முக புத்தகம் வரவில்லை என்றால் நீ உடனே அங்கிருந்து தொலை பேசியில் என்னை அழைத்து என்ன எது என்று விசாரிப்பது ,"என்னடி தலைவலியா? இல்ல பின் முதுகு வலியா? என்று நீ அக்கறை உடன் கேட்கும் பொழுது நான் கலங்கியது உண்டு.ஒவ்வொரு முறை நீ தொலை பேசியில் பேசி முடித்து வைக்கும் பொழுது நீயும் சரி ரேணு வும் சரி "love u " அண்ட் "miss  u டி"  என்று சொல்லி நீங்கள்  போன் வைக்கும் பொழுது அந்த ஆழமான பாசத்தின் வெளிபாடு யாருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது. மனசார நிஜம்மா சொல்றேன் நீ , ரேணு , பசங்க நல்ல இருக்கணும் டா. :)

Tuesday, 7 August 2012

உறை அணுக்களை தானம் செய்யலாம்


உறை அணுக்களை தானம் செய்யலாம்

ஒரு மாதம் முன்பு புதவையில் உள்ள என்னுடைய நண்பர் ஒருவர்தொலைபேசியில் என்னை அழைத்து சிவா சங்கரன் என்னும் ஒரு 13 வயதுசிறுவன் புற்றுநோயால் பாதிக்க பட்டு ஈரோட்டில் இருந்து சென்னை உள்ளபிரபல அடையார் கேன்சர் மருத்துவமனையில் மிகவும் சீரிசான நிலையில்அனுமதிக்க பெற்றுள்ளான் , அவனுக்கு இரத்தம் தேவை படுகிறது அனால்இப்புடி ஒரு சிறுவன் இருப்பது பொய்யா அல்லது மெய்யா என்றுதெரியவில்லை நீ எதற்கும் நேரில் சென்று ஆராய்ந்து உண்மை என்றால்அவனுக்கு தேவையான உதவிகளை செய் என்று சொன்னார் அந்த சிறுவனின்தாயின் தொலைபேசி என்னை என்னிடம் கொடுத்தார். நானும் அடுத்த நாள்காலையில் சென்றபொழுது அந்த சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில்இருந்தான் , அவனை அப்புடியே படுக்கையிலேயே பார்த்து விட்டு அவனின்தாயாரையும் நேரில் சென்று பார்த்து ஊர்ஜிதம்  செய்த பின்னர் மருத்தவரிடம்சென்று அவன் நோயை பற்றி விசாரித்தேன், அவனுக்கு இரத்தபுற்று நோய்என்றும் அதை பரிசோதனை செய்து ஊர்ஜிதம் பண்ண அவனுடைய எலும்புமஜ்ஜையில் ( Bone marrow ) இருந்து இரத்தம் எடுத்தோம் அந்த எடுத்த இடத்திலஇரத்தம் இன்னும் நிற்க வில்லை அதனால்   அவனுக்கு ரத்தப்போக்குஇருப்பதாகவும் அதற்க்கு தினமும் ரத்தத்தில் உள்ள உறை அணுக்களை (platelets ) ரெண்டு unit  ஏற்ற வேண்டும் . இரத்தம் நின்றால் தான் அவனுக்குமேற்கொண்டு சிகிச்சை செய்ய முடியும் என்று சொல்ல பட்டது.

இந்த செய்தியை முக புத்தகத்தில் சகோதரர் வசந்த் அவர்களுடன் இணைந்து  முக புத்தகத்தில் நிலை தகவல்கள் போட்ட உடன் பல நுற்றுகனக்கான நண்பர்கள் ரத்ததானம் செய்ய மருத்துவமனைக்கு வந்தார்கள், நானும் இரத்தம் அந்த சிறுவனுக்காக  கொடுக்கலாம் என்று எண்ணி ரத்த வங்கியில் உள்ள மருத்துவரை அணுகினேன் அப்பொழுது தான் எனக்கு பல விஷியங்கள் எனக்கு தெரியவந்தது.அதாவது

1.பெண்களின் ரத்தத்தில் உள்ள உறை அணுக்களை எடுக்க     மாட்டார்கள், காரனம் உறை அணுக்களின் எண்ணிக்கை பெண்களுக்கு கம்மி என்றும் அப்புடியே எடுத்தாலும் அது திரும்பி நம் ரத்தத்தில் உருவாகுவதற்கு தாமதம் ஆகும் .

2.ஆண்களுக்கு எண்ணிக்கை சரியாக இருக்கும். ரதத்திலிருந்து உறை அணுக்களை பிரித்து எடுத்தாலும் உடலில் மூன்று நாளில் உருவாகிவிடும்.

3.இந்த உறை அணுக்கள் புற்று நோய் கொண்டவர்களுக்கும் மட்டும் இல்லை யாருக்கு அடிப்பட்டு இரத்தம் நிற்காமல் இருந்தாலும் இந்த உறை அணுக்கள் செலுத்தப்படும்.

4.சாதாரணமாக ரத்ததானம் செய்யும் பொழுது 350 m l  இரத்தம் மட்டுமே எடுப்பார்கள் ஆனால் உறை அணுக்களை மட்டும் தானம் கொடுக்கும் பொழுது வெறும் 300 ml இரத்தம் மட்டுமே எடுத்து உறை அணுக்களை பிரித்து எடுத்தவுடன் இரத்தம் மீண்டும் உடலுக்குள் சென்று விடும்

5.இதற்கும் ரத்ததானம் போல் தான் நம் எடை 60 kg  மேல இருக்க வேண்டும்.

6.ரத்த வங்கியில் இந்த உறை அணுக்களை மூன்று   நாளைக்குமேல் வைத்துகொள்ள மாட்டார்கள் காரனம் மூன்று நாளைக்குமேல் அந்த அணுக்கள் இறந்து விடும்.அதனால் 24  மணி நேரத்திற்குள் அந்த உறை அணு நோயாளிக்கு (patient ) செலுத்தப்படும்.


7.ரத்ததானம் செய்வதால் வரும் நன்மைகளில் இதுவும் ஒன்று, புது இரத்தம் ஊருவதுடன் புது உறை அணுக்களும் அதன் கூடவே நமக்கு கிடைகின்றது.

8. இந்த உறை அணுக்கள் தானத்தை எந்த ரத்த பிரிவினரும் கொடுக்கலாம். முன்று நாளில் generate  ஆகிவிடும்.

இந்த உறை அணுக்கள் நம் உடம்பில் வெறும் ஏழு நாள் வரையே பயணம்செய்து அழிய கூடியது.ஆகையால் இதை தானம் செய்தால் அவசர கால உதவியாக பயன் படும். நல்லது செய்ய நமக்கு மனதுண்டு, தயக்கம் மட்டுமே தடைக்கல், அதுவும் சில விளக்கம் சரியாக  கிடைக்கப்பெறாத காரணத்தால்தான்.அந்த ரத்த வங்கி மருத்துவர் எனக்கு விளக்கி கூறியது என்னுள் எப்படிஒரு விழிப்புணர்ச்சி ஏற்ப்பட்டதோ உங்களுக்கும் விழிப்புணர்வு வரவேண்டும்என்பதற்காக இதை பகிர்ந்து கொள்கிறேன்.

மனிதம்
வளர்க்க முன் வாருங்கள்.

Thursday, 12 April 2012

நெருஞ்சி ஒரு பார்வை

                                                     
"நெருஞ்சி" திரு .காலகாலன் அவர்கள் எழுதிய கவிதை தொகுப்பு நூல். எழுத்தாளர் அவர்கள் இந்த நூல் வெளியிட்ட நாள் அன்றே நீங்கள் தான் இந்த நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். சகோதரன் டிஸ்கவரி புக் பலேஸ் வேடியப்பன் அவர்கள் இந்த விமர்சனத்தை தனக்கு தெரிந்த பத்திரிக்கையில் போடுகிறேன் இன்று சொன்னார் , நானும் எழுதி கொடுத்து வெகு நாட்கள் ஆகி விட்டது  ஆனால் இன்னும் எந்த பத்திரிக்கையிலும் வந்ததாக தெரியவில்லை.அதனால் கொஞ்சம் விரிவாக இங்கு எழுதுகிறேன் இந்த "நெருஞ்சி" கவிதை தொகுப்பு நூலை எனது பார்வையில் இருந்து.


                                                          "நெருஞ்சி "
                                                 எனது பார்வையில்


       அது ஒரு சிறு முள் ஆனால் அது காலில் குத்தினால் வலி உயிர் போய்விடும்.இந்த கவிதை நூலும் அப்புடியே தான் , நெருஞ்சி முள்ளாய் இதயத்தை குத்தி கிழிகின்ற  விஷியங்காளாய் விளங்குகிறது இந்த "நெருஞ்சி " என்னும் கவிதை நூல்.பல சமுக அவலங்களை எடுத்துரைகின்றது இந்த "நெருஞ்சி".இன்று கவிதைகள் எழுதும் வட்டம் சிறிது காரனம் இன்று தமிழ் படத்திற்கே தமிழில் சப் - டைட்டில் போட்டால் தான் நமக்கு புரியும் பட்சத்தில் நாம் எங்கே கவிதை தமிழை படித்து புரிந்து கொள்வது .ஆனால் கவிஞர் காலகாலன் அவர்களின் எழுத்தோ மிகவும் அருமை , எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி இருகின்றார். இந்த கவிதை தொகுப்பில் அவர் தொடாத விஷியங்கலே இல்லை என கூறலாம். சொல்ல போனால் இது வெறும் கவிதைகள் அல்ல வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனின் உண்மை முகங்களை தோல் உரித்து காட்டியுள்ளார்.

                       
"பத்திரம் " என்னும் தலைப்பில் ஒரு கவிதை படித்த பொழுது எனக்கு சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பள்ளியின் தீ விபத்தில கருகி பலியான 120 குழந்தைகளின் நினைவு வந்து என் கண்கள் கலங்கியது.பிஞ்சு குழந்தைகள் எண்ணி நான்கு வயது கூட நிரம்பிடாத மொட்டுக்கள் கருகியதே.இந்த விபத்தை யாரால் மறக்க முடியும்
.
பத்திரம்

பள்ளி சமையலறையிலிருந்து
பற்றிக்கொண்ட தீயில்
கருகி நூற்றியிருபது
குழந்தைகள் சாவு -
நல்லவேளை
பத்திரமாய் இருந்தது
புதிதாய் வாங்கிய
கூரைகள் !
மொட்டுக்கள் கருகியதற்க்கு யாரை குற்றம் சொல்வது? பள்ளியின் தலைமையியா ?, இல்லை கட்டிடம் கட்டினவர்களையா?

இன்றைக்கு அடி தட்டு மனைவிகளின் நிலையை பாருங்கள்.கர்ப்பிணி  மனைவி கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து பணத்தை கொண்டுவந்தால் காத்திருந்து களைப்பாகி போன கணவன் மதுக் கடை நோக்கி . இது எவ்வளவு ஒரு ஈனமான  செயல்
"பகலெல்லாம்
கல்லுடைத்து வீடு
திரும்பினாள்
கர்ப்பிணி
காத்திருந்து களைப்பில்
மதுக் கடை நோக்கி
கணவன்"
நம்மில் பல பேர் இப்புடி பட்டவாழ்கையை அனுபவித்து கொண்டு தான் இருகின்றார்கள் என்று தெரியாது.

இன்று பல பேருக்கு கனவுகள் கனவுகளாகவே தான் இருகின்றது அது எவ்ளோ ரணத்தை குடுக்கும் என்பது நமக்கு தெரியும் , கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நமக்கே இப்புடி என்றால்
"எங்கள்
குப்பத்துச் சிறுவர்களின்
கனவுகள் கூட
கண்டிப்பாய்,
கருப்பு வெள்ளையில்
தான்."
வறுமையில் வாடுபவர்களை என்ன சொல்வது, கவிஞன் இதை விட  எப்படி உணர்ச்சியாக விளக்க முடியும்.
வறுமை ஒன்றே நாய்களுக்கும் சாலையோர சிறுவர்களுக்கும் ஒற்றுமையான ஒரே விஷயம். இப்புடி நிறைய பேர் இருப்பது தெரியாமல் நாம் காசு கொடுத்து வாங்கும் உணவை கூட  வயிறு நிறைந்தால் மிச்சத்தை வைத்து விடுகிறோம், அன்பர்களே நாம் அவர்களுக்கு பெரிதாக ஏதும் செய்யா விட்டாலும் பரவாயில்லை மிச்சம் வைக்கும் உணவை போட்டாலும் மடித்து இது போல் வறுமையில் வாடுபவர்களுக்கு கொடுத்து உதவுங்கள், அரை வயிறேனும் நிறைந்த சந்தோஷத்தில் அவர்கள் இருப்பார்கள்.

பெண் சிசுக் கொலை இன்றும் பல்வேறு மூளைகளில் நடந்து கொண்டு தான் இருகின்றது,  எத்தனை விழிப்புணர்வு உண்டாக்கினாலும் நடந்து கொண்டு இருக்கின்ற விஷயம் இது. இந்த விஷியத்தில் கவிஞர் கண்டித்தே எழுதி இருகின்றார்

"போதுமிந்த
ஈனச்செயல்
நிறுத்திக் கொள்ளுங்கள் -
இல்லையேல்
இன்னும் சில ஆண்டுகளில்
உங்கள் மகன்
தனியாய்த் திரிய வேண்டும்
இல்லை
திருநங்கைத் தான்
மணக்க வேண்டும் ."
இது அத்தனைக்கும் காரனம் வறுமை, இந்த வறுமைக்கு யாரை நோவது?

வறுமையில் தான் எத்தனை விதமான தொழில்கள் அடங்கு கின்றது  பிச்சை எடுப்பது , பெண் சிசு வதைக்க படுவது, புத்தகத்தை எந்த வேண்டிய கைகள் மூட்டை சுமக்கின்றது, சிறுமிகள் விபச்சாரம்,
ஐயஹோ  கடவுளே இவர்களுக்கு ஒரு வழி பிறக்காதா என்று இந்த நூலை படிக்கும் நமக்கு கேக்க தோன்றும்.

வரதட்சனை பிரச்னையை பற்றி பேசும் பொழுது

"பையன் பட்டம் பெற்று விட்டான்
தரகர் இனி தாராளமாய்
விலை பேசலாம்"
இதோ இனோன்றையும் சொல்கிறேன்
" பெண் வீட்டு
வாசற்கதவில் ,
"
மலிவு விலையில் மணமகன் வேண்டும் ".

ஆண்களே சற்றே சிந்தியிங்கள் இனியும் இது தொடர்ந்தால் உங்களை ஒரு மனிதனாக பார்க்காமல் ஒரு பொருளாக பார்க்கும் காலம் வரும், ஒரு ஜட  பொருளுக்கு என்ன மரியாதையோ அதை தான் உங்களுக்கும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்பதை உணருங்கள்..

நம் நாட்டின் சட்டத்தில் உள்ள கிழிசல்களை ஒரு ஏழை பெனின் கிழிந்த சேலையோடு கவிஞர் ஒப்பிட்டு பார்த்திருப்பது பொருத்தமே.
சாதியை பற்றி மிக அழகா சொல்லி இருக்கிறார் கவிஞர்  "
மதம்
ஒரு வகையில் யானையும் மனிதனும் ஒன்று தான்
அது யாருக்கு பிடித்தாலும் அழிவு நிச்சியம்.”

 இந்த தொகுப்பில் உறவுகள் பற்றியும் நிறைய சொல்லி இருகின்றார் கவிஞர் அதில் ஒன்று
"இப்பொழுது விடுமுறை இல்லாத காரணத்தால்
அப்பாவின் முதலாம் ஆண்டு
தவசத்திற்கு
அவசியம் வருவதாய்
அமெரிக்காவிலிருந்து
அவசரச்செய்தி அனுப்பினான்
மகன் !"
இதற்க்கு பெயர்தான் கடமையா? இன்றைய தலை முறையினருக்கு நாளைக்கு இதே நிலைமை தனக்கும் வரும் என்பதை கவிஞர் நமக்கு உணர்த்தியுள்ளார்.

இந்த நூல் வெறும் வறுமையை மட்டும் சொல்ல வில்லை , வரதட்சனை கொடுமை , சட்டத்தின் நேர்மை இன்மை, சாதி பிரச்சனை, உறவுகள், தீவிர வாதம் , என்று இப்புடி பல பல சமுக சீர்கேடுகளை நமக்கு காட்டியுள்ளார் கவிஞர் . இந்த தொகுப்பில் உள்ள கருத்துக்களை மிகவும் தைரியமாக எடுத்து உரைத்து இருகின்றார்  கவிஞர் காலகாலன், அவருக்கு நன்றிகள் பல.
இன்றைய மக்கள் மனதில் இருக்கும் இருக்கும் வன்மத்தை கீறி எடுக்கவும் நாளை சந்ததியினர் புரையோடி போகாமல் இருக்கவும் இந்த "நெருஞ்சி " நிச்சியமாக உதவும்.

                                                              செல்வி.கயல்விழி லக்ஷ்மணன்